மிஸ்டர் கழுகு: பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சறுக்கல்!

‘‘போயஸ் கார்டனில் ரஜினியின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது” என்றபடி கழுகார் நம்முன் ஆஜரானார்.

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் ‘கபாலி’ ரஜினி ஆதிக்கமா?” என்றோம்.

‘‘இது ‘கபாலி’ ரஜினி அல்ல. கன்னியாகுமரியைச் சேர்ந்த ரஜினி. சசிகலாவின் உதவியாளராகச் சேர்ந்துள்ள ரஜினி என்ற இந்தப் பெண்,  கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழியைச் சேர்ந்தவர். பி.எஸ்சி அக்ரி படித்தவர். சிறுதாவூர் மற்றும் போயஸ் கார்டனில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்க வந்தவர். சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்று, போயஸ் கார்டனிலேயே தங்கவைக்கப்பட்டார். ரஜினியிடம், சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அப்படி ஒரு பாசம். இவருடைய கணவர், ரவீந்திரன் ஜெயா டி.வி-யின் மார்கெட்டிங் அதிகாரி.”

‘‘ஓஹோ!”

‘‘ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் முதல்வர் கோட்டாவில் ரஜினியின் மகளுக்கு எம்.டி படிக்க சீட் பெறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் ரஜினி மலேசியா சென்றுள்ளார். அங்குள்ள தொழிலதிபர்கள், ரஜினியின் செல்வாக்கை அறிந்து, அவரை நன்கு கவனித்து அனுப்பி இருக்கிறார்கள். பலரும் அவரால்தான் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டோம் என்று தகவல்களைக் கிளப்பி வருவதால், அவரைப் பிடித்தால் வேலை ஆகும் என்று, பலரும் நம்பிச் சில காரியங்களைச் செய்து வருகிறார்களாம். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆட்கள் இன்னும் துடிப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவரது வட்டாரத்தைக் கேட்டால், ‘அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் பல வருடங்களாக அவரைத் தெரியும். அதனால் தங்கள் உதவிக்காக கார்டனில் தங்க வைத்துள்ளார்கள்’ என்று பட்டும் படாமலும் சொல்கிறார்கள். மொத்தத்தில் ரஜினியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது!”

‘‘அ.தி.மு.க-வில் ஆள்சேர்ப்பு படலம் வேகமாக நடக்கிறதே?”

‘‘தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கும் ஆட்கள் போவதும் வருவதும் எப்போதும் நடப்பதுதான். யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் பக்கம் ஆட்கள் போய்ச் சேர்வது அதிகமாக நடக்கும். அந்தவகையில்தான், தற்போது தி.மு.க-வில் இருந்து கருப்பசாமி பாண்டியன், த.மா.கா-வில் இருந்து ஞானசேகரன் ஆகியோர் அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டனர். விரைவில், ம.தி.மு.க-வில் இருந்து ரெட்சன் அம்பிகாபதி போக இருக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், முன்பெல்லாம் ஆட்களைச் சேர்ப்பதில் ஜெயலலிதா ஆர்வம் காட்ட மாட்டார். இப்போது ஆர்வம் காட்டுகிறார்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்