உன் சாவு என் கையில்தான்! மிரட்டியவர் சிக்கிய கதை...

அச்சுறுத்தல்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான வீணை காயத்ரியின் அலுவலகம் சூறையாடப்பட்டு, அவருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அச்சத்தில் இருந்த வீணை காயத்ரிக்கு தைரியம் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

வீணை காயத்ரியை சந்தித்த போது பதற்றத்துடன் பேசினார். ‘‘கடந்த ஜூலை 25-ம் தேதி காலை 7.30 மணி அளவில் வாட்ச்மேன் தொலைபேசியில் என்னிடம் பேசினார். ‘உங்கள் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. லைட் எரிந்துகொண்டிருக்கிறது. யாரோ வந்துள்ளார்கள்போலத் தெரிகிறது’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே, காவல் துறையினருக்குத் தகவல் சொன்னேன். பின்னர், அலுவலகத்துக்குச் சென்று பார்த்தபோது, அறையின் டேபிளில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதன்மீது இருந்த ஒரு பேப்பரில், ‘Your death is in my hand’ என்று ஆங்கிலத்திலும், ‘உன்னைவிட மாட்டேன் வீணை காயத்ரி’ என்று தமிழிலும் எழுதப்பட்டு இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், என் முகத்திலும் முதல்வர் முகத்திலும் ஏதோ ஓர் ஆயுதத்தைக் கொண்டு குத்தப்பட்டு இருந்தது. யாருடனும் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. காவல் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். தமிழக முதல்வர் என்னிடம், ‘ஒன்றும் கவலைப்படாதீர்கள். காவல் துறையினர் விசாரிப்பார்கள்’ என்றார். மிருதங்கத் துறையில் சில மாணவர்கள் மற்றும் விரிவுரையாளரால் சில பிரச்னைகள் வந்தன. வகுப்புத் தொடங்கிய பின்னர், சில மாணவர்கள் தாமதமாக வருவார்கள். அவர்களிடம் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொண்டேன். அந்த மாணவர்கள் தரப்பில் இருந்து எதிர்வினைகள் வந்தன. பல்கலைக்கழகம் வளர வேண்டும் என்று நினைக்கிறேன். பல்கலைக்கழகத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்கள் மீதும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளேன். இதனால் எல்லாம் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்குச் செல்வார்களா எனத் தெரியவில்லை’’ என்று சொன்னார்.

இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்திய பட்டினப்பாக்கம் போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘இதுவரை 25 பேரை விசாரித்து உள்ளோம். வீணை காயத்ரிக்குப் பிடிக்காத ஒருவரோ அல்லது வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களோதான் இதைச் செய்திருக்க வேண்டும்’’ என்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்