ரவுடி கும்பல் பிடியில் மதன்! நெருங்கும் போலிஸ்

திருப்பம்

காசிக்குச் சென்று கங்கையில் சமாதி அடைவதாகத் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன் மாயமானார் வேந்தர் மூவிஸ் மதன். நேபாளத்தில் பதுங்கி இருப்பதாகவும் அடுத்த வழக்கு விசாரணையின்போது அவர் ஆஜர்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் 28-ம் தேதி மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி மதனின் தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மதன் மீதும், பாரிவேந்தர், ஐ.ஜே.கே கட்சி நிர்வாகிகள் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி) போலீஸில் புகார் கொடுத்து உள்ளனர். மதன் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை சி.சி.பி போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்