பெண்களைத் தொடக்கூடாத இடங்களில்... வரம்புமீறினார்களா வனத்துறையினர்?

தேனியில் நடந்த அத்துமீறல்!கொடூரம்

ழங்குடி மக்களைத் துன்புறுத்துவது ஆதிகாலத்து வழக்கங்களில் ஒன்று. அவர்கள் அப்பாவிகள் என்பதால் மட்டுமல்ல, அவர்களுக்காக யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியம். இப்போது தேனி மாவட்டத்தில் நடந்திருப்பதைக் கேள்விப்படும்போது தேள் கொட்டுவதைப்போல இருக்கிறது.

தேனி அருகே மலையில் தேன் எடுக்கச் சென்ற பழங்குடி இனப் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது. அதை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டமன்றத்தில் மறுத்தார். ஆனாலும், அடுத்த சில மணி நேரங்களிலேயே, குற்றம்சாட்டப்பட்ட வனத்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருப்பமும் நிகழ்ந்தது.

தேனி மாவட்டத்தில் வருசநாடு அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியில் பழங்குடி இனத்தவர்களில் குறிப்பிட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் தேன் எடுத்து அதை விற்பனை செய்வதுதான் அவர்களின் முக்கியத் தொழில். 10 நாட்களுக்கு முன்பாக, சின்ன சுருளி அருவி அருகில் உள்ள வனப்பகுதியில் தேன் எடுத்துவிட்டு பழங்குடி இனப் பெண்கள் திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த வனத்துறையினர், சோதனை என்ற பெயரில் அத்துமீறி அந்தப் பெண்களின் சேலையை உருவி மானபங்கப்படுத்தியதாகத் தகவல் பரவியது. ஊருக்குத் திரும்பிய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீருடன் விவரித்துள்ளனர். இதை யாரிடம் சொல்லி நியாயம் கேட்பது என்று தெரியாமல் அழுது புலம்பி உள்ளனர். பின்னர், கடந்த ஜூலை 25-ம் தேதி அன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்