மிஸ்டர் கழுகு : காவு வாங்கும் கன்டெய்னர்!

காக்கி தொப்பியோடு என்டர் ஆன கழுகாரைப் பார்த்ததுமே காவல் துறை வட்டாரத் தகவல்களோடு வருகிறார் என்பது தெரிந்தது. சல்யூட் வைத்துவிட்டு முதல் கேள்வியைப் போட்டோம்.

‘‘கடந்த வாரம் தமிழகக் காவல் துறையில் 5 ஐ.ஜி-க்கள், 13 காவல் கண்காணிப்பாளர்களை டிரான்ஸ்ஃபர் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டாரே? அதில் ஏதோ சர்ச்சையாமே?”

“ஆமாம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கடந்த ஏப்ரல் 22-ம் தேதியன்று கரூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தி சுமார் ஐந்து கோடி ரூபாயை பறிமுதல் செய்தவர், கரூர்

எஸ்.பி-யான வந்திதா பாண்டே.  சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது கரூர் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவர் காக்கர்லா உஷா. இவர்கள் இருவருக்கும் திடீரென கல்தா கொடுத்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பு திருப்பூர் செங்கப்பள்ளி அருகே மூன்று கன்டெய்னர் லாரிகளில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாயைக் கைப்பற்றினர். அந்த நேரத்தில் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த சரோஜ் குமார் தாகூரும் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.”

“உள்நோக்க மாறுதல்போலத் தெரிகிறதே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்