முகங்கள் - விஜய் கார்த்திக்

யற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை முதல் ஜம்மு - காஷ்மீர் வரை விழிப்பு உணர்வுப் பயணம் சென்று வந்துள்ளார், தமிழகப் பொறியாளர் விஜய் கார்த்திக். பெரம்பலூரில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த விஜய் கார்த்திக், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு எட்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார்.

‘இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதை நிறுத்துவோம்... இயற்கையோடு இயைந்து வாழப் பழகுவோம்... மரபுக்குத் திரும்புவோம்’ என்ற கருத்தை வலியுறுத்தி ஆந்திரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் 33 நாட்களில் 3 ஆயிரத்து 800  கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஜம்மு - காஷ்மீரில் பயணத்தை முடித்தார். அவரிடம் பேசினோம்.

“உங்கள் பயணத்தின் நோக்கங்கள் என்ன?”

“நம்மாழ்வாரின் இயற்கை வேளாண்மை முறையால் நான் ஈர்க்கப்பட்டேன். இயற்கை முறையிலான விவசாயத்தை மறந்துவிட்டு மண்ணைப் பாழ்படுத்தவும், மண்ணை விஷமாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. விவசாய நிலங்களைக் கட்டடங்களாக மாற்றி வருகிறார்கள்.

இயற்கையை நாம் பாதுகாக்கவில்லை. நம்மைத் தான் இயற்கை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் எதைவிட்டுச் செல்லப்போகிறோம்? வெறும் கட்டடங்களையும், தொழில்நுட்பங்களையுமா? தேனீக்களின் அழிவு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது உணவுச் சங்கிலி சிதைவு என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் கவலை எனக்குள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்து பணம் சம்பாதிக்கும் இந்தக் கலாசாரம் எனக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை இந்தியாவை அந்நியரிடம் அடகு வைக்கிறோமோ என்ற எண்ணம் மேலோங்கியது. அதன் விளைவே நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.”

“ஏ.சி அறையில் பணிபுரிந்து வந்த உங்களுக்கு இந்தப் பயணம் சிரமத்தைக் கொடுக்கவில்லையா?”

“அவ்வப்போது நிலவும் தட்பவெப்பச் சூழலுக்கு ஏற்ப பயணத்தை மேற்கொண்டேன். என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டேன். கிடைக்கிற இடத்தில் படுத்து உறங்கினேன். நிறைய இடங்களில், நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று எடுத்துக் கூறுவேன். நகரத்து மக்கள் நான் கூறிய கருத்துக்களைப் புரிந்துகொண்டார்கள். ஆனால், கிராமங்களில் உள்ள மக்களுக்கு என் கருத்துக்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. அங்கே யாராவது ஆங்கிலம் தெரிந்தவர்கள்  இருக்கிறார்களா எனத் தேடுவேன். கிடைக்கிறவர்களிடம் பேசி அவர்களுக்கு விளக்குவேன். பின்னர், அவர்கள் அங்குள்ள கிராமத்து மக்களுக்குச் சொல்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்