"மிகவும் எளிமையான மனிதர்!"

இப்படியும் ஒரு நீதிபதிநேர்மை

நீதிமன்றங்கள் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைச் சந்தித்து இருக்கின்றன. அதுபோல, நீதிமன்றங்களில்  விசித்திரமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சிவக்குமார். இவர் ஆத்தூர் நியூ ஹவுசிங் யூனிட் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். அரைக்கை சட்டை, வெள்ளை வேட்டி, ரப்பர் செருப்போடு கல்லூரி மாணவரைப் போல இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறி நீதிமன்றத்துக்கு வருகிறார். சக நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்களோடு ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார். நீதிபதிக்கு யாராவது கையூட்டு கொடுக்க முற்பட்டால் நீதிமன்றத்துக்கு வரச் சொல்லி நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் முன்பு அவரைப் பகிரங்கப்படுத்தி எச்சரிக்கை செய்து அனுப்புகிறார்.

சமீபத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் குடல் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், ‘‘எங்கள் மருத்துவமனையில் ஆறு நாட்கள் தங்கியிருந்தார். டிஸ்சார்ஜ் ஆன அன்றுதான் அவர் நீதிபதி என்றே எங்களுக்குத் தெரியும். அனைத்தையும் சகித்துக்கொள்ளும் பக்குவப்பட்ட மனிதர். அப்படி ஒரு மனிதரை பார்த்ததில்லை’’ என்கிறார்கள்.

சிவக்குமாரின் நண்பர் கண்ணன், ‘‘சிவக்குமாரை நான் சிவா என்றுதான் அழைப்பேன். சிவா  கீரனூரில் வித்தியாசமான மனிதராக திகழ்ந்தார். உயர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சிறு வயதில் இருந்தே சாதி மறுப்பாளர். சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோதும் தனித்துவமாக விளங்கினார். ஏழைகளுக்காக இரக்கப்படக் கூடியவர். சிவாவைப்போல ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. நேர்மையான மனிதர். நீதிபதி பதவிக்கு மிகப் பொருத்தமான மனிதர்’’ என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்