எங்கள் வீட்டில் வேலை செய்தால்தான் ராஜ்பவனில் வீடு!

மிரட்டினாரா ராஜ்பவன் அதிகாரியின் மனைவி?சர்ச்சை

ளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என கவர்னர் ரோசய்யா மீது விமர்சனங்கள் விழுந்திருக்கும் நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து அடுத்த புயல் ஒன்று வீச ஆரம்பித்திருக்கிறது. ‘‘ஊழியர்களைப் பழி வாங்குகிறார்’’ என கவர்னரின் செயலாளராக இருக்கும் ரமேஷ் சந்த் மீனா மீது புகார் வாசிக்கிறார்கள் ராஜ்பவன் ஊழியர்கள்.

2013-ம் ஆண்டு மார்ச் மாதம் கவர்னரின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ரமேஷ் சந்த் மீனா. ‘அவரை மாற்ற வேண்டும்’ எனப் புகார்கள் எழுந்திருக்கின்றன. தங்கள் அடையாளங்கள் தெரிந்தால் பழிவாங்கப் படுவோம் எனப் பேச ஆரம்பித்தார்கள் கவர்னர் மாளிகை ஊழியர்கள்.

‘‘இதுவரையில் எத்தனையோ செயலாளர்கள் கவர்னர் மாளிகையில் இருந்திருக்கிறார்கள்.  ரமேஷ் சந்த் மீனா வந்த பிறகுதான் தொல்லைகள் ஆரம்பமாகின. தற்காலிக ஊழியர்கள் நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படும். அது ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படுவது கிடையாது. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ராஜ்பவனில் நிறையக் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் கோயம்பேடு மற்றும் பனையூரில் உள்ள ரமேஷ் சந்த் மீனாவின் வீடுகளுக்கு ராஜ்பவன் தோட்டத்தில் பணியாற்றி வரும் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். உடல்நிலையைக் காரணம் காட்டி அங்கே வேலைக்குப் போகவில்லை என்றால், ரமேஷ் சந்த் மீனாவின் மனைவி, ராஜ்பவன் அதிகாரிகளிடம் புகார் சொல்கிறார். இதனால், ராஜ்பவனில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இப்படி ரமேஷ் சந்த் மீனாவின் வீட்டில் இருந்து வரும் உத்தரவுகளால் இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்