மிஸ்டர் கழுகு : தாது... தூது... சசிகலா புஷ்பா!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார்.

‘‘உச்ச நீதிமன்றத்தில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதில் எப்போது தீர்ப்பு வரும் என்பது சஸ்பென்ஸாக நீடித்து வருகிறது. இந்த நேரத்தில் அந்த வழக்குக்காக பெங்களூரு நீதிமன்றத்தில் ஏறி இறங்கிய வழக்கறிஞர்களுக்கு வரிசையாகப் பதவிகள் கொடுக்கப்பட்டு உள்ளன” என்றபடி கழுகார் தொடங்கினார்.

‘‘அரசு வழக்கறிஞர் மாற்றம் பற்றிக் கடந்த இதழில் சொல்லி இருந்தீர். இப்போது நியமனம் பற்றிச் சொல்லப் போகிறீரா?” என்றோம். தலையாட்டியபடி தொடங்கினார்.

‘‘ஆம். புதிய அரசாங்கம் அமைந்தவுடன் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்போல், இதுவும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், தொடர்ந்து இரண்டாவது முறையும் அ.தி.மு.க ஆட்சியே அமைந்ததால், பெரிதாக மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்தில் அதிரடியாக அரசு வழக்கறிஞர் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 90 அரசு வழக்கறிஞர்களில், 45 பேரிடம் திடீரென ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. அவர்களில்  அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் உட்பட 45 அரசு  வழக்கறிஞர்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. அதற்கடுத்து ஒருசில நாட்களில் புதிதாக அந்த இடங்களுக்கு 45 புதிய வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்