தீவிரம் காட்டும் தி.மு.க... மிதப்பில் அ.தி.மு.க.!

கொங்கு மண்டல நிலவரம் எப்படி?

ட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெறுவதற்கு பெரிதும் கைகொடுத்த கொங்கு மண்டலத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளின் தலைமை கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால், கள நிலவரம் எப்படி இருக்கிறது?

சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது தி.மு.க கைப்பற்றியது. ஆனால், கொங்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே தி.மு.க வெற்றிபெற்றது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய தலைமைக் கழகத்தில் இருந்து சிலர் அனுப்பப்பட்டனர்.

‘‘சட்டமன்றத் தேர்தலில், சில வேட்பாளர்கள் செலவே செய்யவில்லை. ஒரு சில வேட்பாளர்கள் தேர்தல் வேலையில் ஆர்வம் காட்டவில்லை. என்.கே.கே.பி.ராஜாவின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலையில் ஈடுபடவில்லை என்கிற விவரங்களைச் சொல்லியிருக்கிறோம். அதன்பிறகுதான், கொங்கு மண்டலத்தை நோக்கி ஸ்டாலின் வரத்தொடங்கி இருக்கிறார்” என்றார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.

இன்னொரு தி.மு.க நிர்வாகியிடம் பேசியபோது, “சமீபகாலமாக மாற்றுக் கட்சியிலிருந்து பலர் தி.மு.க-வில் சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஈரோட்டில் மாற்றுக்கட்சியில் இருந்து சேருவதற்குத் தேதி கேட்டபோது,  ‘நானே ஈரோட்டுக்கு வருகிறேன்’ என்று தேதி கொடுத்து ஸ்டாலின் இங்கு வந்துபோனார். தீரன் சின்ன மலையின் 211-வது நினைவுநாளை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி ஓடாநிலைக்கு வந்த ஸ்டாலின், ‘தீரன் சின்னமலைக்கு தி.மு.க-தான் சிலை நிறுவியது. அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவிட்டுப் போயிருக்கிறார்” என்றார்.

கடந்த வாரம் திருப்பூர், இந்த வாரம் ஈரோடு, கோவை என கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். இதற்கெல்லாம் காரணம், சட்டமன்றத் தேர்தல் போல் இல்லாமல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்