நெல்லை - தூத்துக்குடி செடி கான்ட்ராக்ட்! ஏமாற்றினாரா சசிகலா புஷ்பா?

புகார்

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, கட்சியில் இருந்த காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் முறைகேடுகள் பற்றிய தகவல்கள் வெளியே வர ஆரம்பித்து உள்ளன.

சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சியில் காவல் துறை துணை கமிஷனர் மயில்வாகனனிடம் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் புகார் செய்துள்ளனர். சசிகலா புஷ்பா மீது நெல்லையிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தனக்கு, கான்ட்ராக்ட் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி, ரூ.20 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாக நெல்லையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மாநகரக் காவல் துறை கமிஷனர் திருஞானத்திடம் புகார் செய்துள்ளார்.

இதுபற்றி ராஜேஷிடம் கேட்டதற்கு, ‘‘நான் டிராவல்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மாற்றுத்தொழில் தொடங்க முடிவு செய்தேன். அந்தச் சமயத்தில், சசிகலா புஷ்பாவைச் சந்தித்து உதவி கேட்டால் செய்து கொடுப்பார் எனச் சிலர் சொன்னதால், அவரைச் சந்திக்கச் சென்றேன். சசிகலா புஷ்பாவைச் சந்தித்தேன்.

அவர் என்னிடம் பேசியபோது, ‘நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள செடிகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட் பெற்றுத் தருகிறேன்’ என உறுதி அளித்தார். அவர் கேட்டுக் கொண்டபடி மறு வாரம் சென்று சந்தித்தபோது, ‘இந்த வேலைக்கு மற்றவர்களானால் ரூ.25 லட்சம் தர வேண்டும். நீங்க நம்ம சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கீங்க. அதனால், ரூ.20 லட்சம் கொடுங்கள்’ என்றார்.

அதை நம்பி, என் நண்பரான பாக்கிய சிங் உடன் சென்று அவரிடம் முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொடுத்தேன். சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகனும் உடன் இருந்தார். பணத்தை வாங்கிக்கொண்ட சசிகலா புஷ்பா, ஒப்பந்த ஆர்டர் கிடைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக மீதித் தொகையை கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார். பின்னர், ஒப்பந்தம் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘இனிமேல் இதுபற்றி என்னிடமோ, என் கணவரிடமோ போனில் பேச வேண்டாம். நேரில் வந்து பேசுங்கள்’ என்றார்.

அதனால், அவருடைய வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசி வந்தேன். ‘நிச்சயமாக உங்களுக்கு இந்த கான்ட்ராக்ட் வாங்கிக் கொடுத்துவிடுவேன். என்னை நம்புங்கள்’ என்று சொல்லி வந்தார். நானும் அவரை நம்பினேன். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒருநாள், எனக்கு கான்ட்ராக்ட் ரெடியாகி விட்டதாகவும் உடனடியாக மீதி உள்ள ரூ.12 லட்சத்தை தருமாறும் சசிகலா புஷ்பாவின் கணவர் என்னிடம் போனில் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்