காரைக்குடியில் 60 லட்சம் சுருட்டல்!

செந்தில்பாலாஜிக்கு புது சிக்கல்!மோசடி

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை, ஜெயலலிதா டம்மியாக்கி வைத்திருந்தாலும், அவர் பவரில் இருந்தபோது போக்குவரத்துத் துறையில் செய்த முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியே கிளம்பி அவரை இன்னும் அந்தலை சிந்தலையாக்கிக் கொண்டிருக்கிறது.

‘‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் சொன்னதை நம்பி, பல பேரிடம் ரூ.60 லட்சம் வரை வசூலித்து அவரிடம் கொடுத்தேன். சொன்னபடி வேலை போட்டுத் தரவில்லை. கொடுத்த பணத்தையும் தரவில்லை. அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்து பணத்தை வாங்கிய இரண்டு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துப் பணத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என சுப்பையா என்பவர் தாக்கல்செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த மனுவைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜியிடம் வேலைக்குப் பணம் கொடுத்து ஏமாந்து வெளியே சொல்லமுடியாமல் தமிழகம் முழுவதும் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தகவல் கிளம்பியுள்ளது.

இந்த மோசடி வழக்கைத் தாக்கல் செய்துள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பையாவைச் சந்தித்தோம். ‘‘வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் டெக்னிக்கல் அசிஸ்டென்டாக காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அங்கே, இயக்குநராக இருந்த பாபு என்னிடம், ‘போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக இளநிலை, அலுவலக, தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு ஆட்களை எடுக்க உள்ளார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜி கைகாட்டும் நபர் களுக்குத்தான் இந்தப் பணியை வழங்க இருக்கிறார்கள். அவர் எனக்கு மிகவும் நெருக்கம் என்பதால், உனக்குத் தெரிந்தவர்களிடம் பணம் வாங்கிக் கொடுங்கள். அப்பாயின்ட்மென்ட் போட்டிடலாம் என்று அமைச்சரே என்னிடம் சொல்லியுள்ளார். இதை நீ உடனே செய்தால், அவரிடம் நீ என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். நீயும் பெரிய போஸ்டிங்குக்கு சீக்கிரம் வரலாம்’ என்று ஆசை காட்டினார். ஒவ்வொரு பதவிக்கும், ரெண்டு லட்சம், மூன்று லட்சம் என ஃபிக்ஸ் செய்திருந்தார்கள். நானும் தெரிந்த நண்பர்களிடம் விவரத்தைச் சொல்லி வேலைக்குப் பணம் வாங்க ஆரம்பித்தேன். பாபு விவரமாக, ‘உன் வங்கி அக்கவுன்டில் எல்லாப் பணத்தையும் போடச் சொல்லு. அப்பத்தான் கணக்குப் பார்க்கச் சுலபமாக இருக்கும்’ என்றார். அதனால், பலரும் என் அக்கவுன்டில் பணம் போட்டார்கள். ஆனால், அதை பாபு, அமைச்சரிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அவ்வப்போது சேரும் பணத்தை எடுத்து வரச்சொல்வார். இப்படி மொத்தமாக 60 லட்சம் கொடுத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்