கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

னித உறவுகளின் மாண்புகளைச் சிதைக்கிற, கொச்சைப்படுத்துகிற வகையில் மகள், சகோதரி, தாய் என சொந்த உறவுகளையே வக்கிரத்துடன் அணுகி, தன் இச்சையைத் தணித்துக் கொண்டு, அவர்களைத் தீர்த்துக்கட்டும் கொடுமைகள் நம் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன.   

ஸ்வீட் ஸ்டாலில் மாஸ்டராகப் பணியாற்றியவர் சின்னராஜ். இவரது இரண்டாவது மனைவி பாண்டியம்மாள். முதல் கணவருக்குப் பிறந்தவர்கள் பவித்ரா, பரிமளா, ஸ்நேகா. இந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தந்தை என்ற ஸ்தானத்தில் சின்னராஜ் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ, அந்த மூன்று பேரையும் காமக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறார். மூத்த மகளான பவித்ராவை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியம்மாளுக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். அதற்கு, பாண்டியம்மாள் மறுப்புத் தெரிவிக்கவே நான்கு பேரையும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். கொலையைவிடக் கொடூரம் அதற்குப்பிறகுதான் நிகழ்ந்தது... அந்த நான்கு பேரின் சடலங்களோடு உடலுறவு கொண்டுள்ளார், அந்தக் காமக்கொடூரன்.

காமத்துக்காகத் தன் ரத்தச் சொந்தங்களைக் கொலை செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன என்பது வேதனையான யதார்த்தம்.

சித்தி மகளைக் கர்ப்பமாக்கி...

சேலம் அருகே ஒரு கிராமத்தில், செல்வம் என்பவர் தன் சொந்த சித்தியின் மகளை வல்லுறவு கொண்டிருக்கிறார். அதனால், செல்வத்துக்கு சகோதரி முறையான அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துவிட்டார். அதைத் தன் அம்மாவிடம் சொல்லி அழுத பிறகு, அந்தக் கருவை கலைத்து உள்ளனர். ஆனாலும், மீண்டும் அந்தப் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுத்துள்ளார் செல்வம். அதனால் சண்டை போட்டு செல்வத்துடனான உறவையே அந்தக் குடும்பம் துண்டித்துவிட்டது. இந்த நிலையில், அந்தப் பெண் வேறொரு பையனுடன் நட்பாகப் பழகியிருக்கிறார். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த செல்வம், அந்தப் பெண் மீது ஆசிட் வீசியிருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

மதுபோதையில் சகோதரியை...

செல்வம் தன் சித்தி மகளை நாசமாக்கினார் என்றால், கோவை ரத்தினபுரி நகரைச் சேர்ந்த ரவி என்பவர், தன் சொந்த சகோதரியையே சிதைத்துவிட்டார். மது போதையில் வீட்டுக்கு வந்த ரவி, தன் சொந்த சகோதரியை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டுள்ளார். அந்தத் தவறு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் சகோதரியைக் கொலை செய்துவிட்டார். மது போதை தெளிந்தவுடன், ‘நான் பெரிய தவறு செய்துவிட்டேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் கடிதத்தில், “அன்புள்ள அம்மாவுக்கு நான் உங்களை விட்டுப் பிரிய நேரம் வந்துருச்சு. நான் போறேன்னு கவலைப்படாதீங்க. நான் இன்னொரு ஜென்மம் எடுத்து வருவேன். அந்த ஜென்மத்திலாவது உங்கள் பெயர் கெடுக்காத உயிராக வருவேன்” என்று எழுதி இருந்தார்.

ராணுவ வீரரின் வெறிச்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே அம்பலக்கடையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரூஸ்வெல்ட். இவருக்கு 2014-ல் நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ரூஸ்வெல்ட் புரிந்த குற்றம் என்ன தெரியுமா? தன் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்ததுதான். ரூஸ்வெல்ட்டின் மனைவி உடல் ஆரோக்கியம் இல்லாமல் உயிரிழந்தார். இவர்களின் ஒரே மகள் ஷிர்லி ஜாஸ்மின், தன் அத்தை வீட்டில் வசித்துவந்தார். ரூஸ்வெல்ட் ராணுவத்தில் ஓய்வுபெற்று ஊருக்குத் திரும்பினார். ஜடா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். அத்தை வீட்டில் இருந்த ஜாஸ்மினை தன் வீட்டுக்கு அழைத்துவந்தார். 2010 மே, 29 அன்று குளியலறையில் ஜாஸ்மின் இறந்துகிடந்தார். அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போயிருந்ததால், திருட்டுக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், ஜாஸ்மின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது, அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. டி.என்.ஏ சோதனையில் அந்தக் கர்ப்பத்துக்குக் காரணம் தந்தையான ரூஸ்வெல்ட் என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், தன் மகளைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதையும், கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, கொலை செய்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்