விபசாரத்தில் லட்சங்களை குவிக்கும் புதுவை போலிஸ்!

யார் அந்த இரண்டு பேர்?குற்றம்

ந்தியாவில் விபசாரத் தொழிலின் தலைநகரமாக புதுச்சேரியை இன்னும் சில நாட்களில் அறிவித்து விடலாம். அந்த அளவுக்கு விபசாரம் அப்கிரேடு செய்யப்பட்டு, மிகவும் ஹைடெக்கான முறையில் அரங்கேறி வருகிறது.

பிரெஞ்சுக் கலாசாரத்தைத் தாங்கியிருக்கும் புதுச்சேரியில் சமீபகாலமாக விபசாரக் கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மதுபானங்களின் விலை இங்கு குறைவு என்பதால் சென்னை, பெங்களூருவைச் சேர்ந்த மதுப்பிரியர்களுக்கு புதுச்சேரிதான் எவர்கிரீன் சாய்ஸ். வார இறுதி நாட்களில் இவர்களால் நகரமே நிரம்பி வழியும். இவர்களைக் குறிவைத்துத்தான் விபசாரம் நடத்திவருகிறது ஒரு புரோக்கர் கும்பல்.

இதுகுறித்து விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன. ஒவ்வொரு மாதமும் ஆந்திரம் மற்றும் கேரளப் பகுதிகளுக்குச் செல்லும் இந்தக் கும்பல் வறுமையில் இருக்கும் குடும்பங்களை உள்ளூர் புரோக்கர்களோடு அணுகுகிறது. அவர்களிடம், ‘மிகவும் பெரிய ஆட்களுடன் மட்டும்தான் உங்கள் பெண்ணை அனுப்பிவைப்போம். சாப்பாடு, உடை, தங்குமிடம் அனைத்தும் பார்த்துக்கொள்வோம். கை நிறைய பணத்தோடு உங்கள் பெண் வருவாள்’  என்று ஆசை வார்த்தைகள் கூறுவதால், பெற்றோர்களும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் பெண் பிள்ளைகளை இந்தக் கும்பலுடன் அனுப்பிவிடுகிறார்கள். இப்படி மாதத்துக்கு ஒருமுறை சுமார் 40 பெண்களை இரண்டு டெம்போ டிராவலர்களில் அழைத்து வந்து நெய்வேலி, ஆரோவில், கோட்டக்குப்பம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில்  இருக்கும் விடுதிகளில் ஐந்து பேராக இறக்கிவிடுகிறார்கள். இவர்களை வாரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் அனைத்து விடுதிகளுக்கும் மாற்றிவிடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்