'முரட்டு பக்தன்' ஆட்சி முடிகிறதா?

தூத்துக்குடி தி.மு.க-வில் வெடி!திருப்பம்

டந்த 35 வருடங்களாகத் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க-வையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்.பெரியசாமிக்கு இப்போது நெருக்கடிகள் துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன. 

எதிர்காலத்தில் இவர் தனக்கு எதிரியாக வருவார் எனத் தெரிந்தால் அவரை வளரவிடாமல் தடுப்பதும், தனக்கு எப்போதுமே விசுவாசியாக இருப்பார் எனத் தெரிந்தால் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்து தனது பக்கத்திலேயே வைத்துக்கொள்வதும் தி.மு.க-வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரான என்.பெரியசாமியின் வழக்கம். இவரால் பதவிகள் பெற்றவர்களும் உண்டு... ஓரங்கட்டப் பட்டவர்கள், கட்சியைவிட்டே ஓடியவர்களும் உண்டு.

ஆரம்பகாலம் முதல் தி.மு.க தலைவர் கருணாநிதியின் ஏவல்களுக்கு ஏற்ற தொண்டனாக இருந்து செயல்படுவதால் கருணாநிதியின் அன்பைப் பெற்றவராகக் கருதப்படுகிறார் பெரியசாமி. அவரை, ‘கலைஞரின் முரட்டு பக்தன்’ என்றே அழைப்பார்கள். அந்த அளவுக்கு கருணாநிதியின் மனதில் இடம்பிடித்த பெரியசாமியை இதுவரையிலும் யாராலும் ஒன்றும் செய்திட முடியவில்லை. எதிர்த்து நின்றவர்கள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.  

ஆனால், சமீபகாலமாக நிலைமை மெல்லமெல்ல மாறி வருகிறது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவி, அங்கு பெரியசாமியிடம் முட்டி மோதி சாதிக்க முடியாமல் மீண்டும் அ.தி.மு.க-வுக்குத் திரும்ப முயற்சி செய்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வாகவும் ஆனார் அனிதா.     

அவரை அடக்கிவிட்ட தைரியத்தில் இருந்த பெரியசாமிக்கு, ம.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவி மாநில இளைஞர் அணித் துணைச்செயலாளர் பொறுப்புக்கு வந்திருக்கும் ஜோயல் மூலம் மீண்டும் தலைவலி வந்திருக்கிறது. கூட்டங்களில் பெயரை உச்சரிப்பது, இருட்டடிப்பு செய்வது உள்ளிட்ட தனது வழக்கமான அரசியல் மூலம் ஜோயலை அடக்கிப் பார்த்தார் பெரியசாமி. ஆனாலும் பெரியசாமியால் ஒதுக்கப்பட்டவர்கள், விரட்டப் பட்டவர்கள் என ஒரு டீம், ஜோயல் பக்கம் அணி சேர்ந்துவிட்டது. பெரியசாமியின் தீவிர பக்தர்களான மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்

ஏ.கே.பூபதி, முன்னாள் தூத்துக்குடி யூனியன் சேர்மன் வி.எஸ்.கருணாகரன் உள்ளிட்டவர்கள்கூட இப்போது அனிதா, ஜோயல் ஆகியோர் கொண்ட புதிய அணியைத் தாங்கிப் பிடிக்கத் தொடங்கியி ருக்கிறார்கள்.

ஏ.கே.பூபதி, அனிதா, ஜோயல், கருணாகரன் உள்ளிட்ட பெரியசாமியின் எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து பெரியசாமிக்கு மாற்று வேண்டும் எனப் பேசியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகக் கடந்த 6-ம் தேதி தூத்துக்குடியில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் பூபதி. ஜோயல் தலைமை வகித்தார். அனிதா உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் அதில் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்