மனச்சிறையில் சில மர்மங்கள் - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆசை 100 வரை!டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

லீலாவுக்கு அவளுடைய பூஜை அறைதான் உலகம். கிழமை தவறாமல் விரதம் இருப்பது, நல்ல நாள் என்றால் அதற்கேற்றாற்போல பூஜை, புனஸ்காரம் என்று பக்தி பழமாக இருந்தாள் லீலா.

அவரது நம்பிக்கைக்கு விரோதமாக யாராவது நடந்துகொண்டால், லீலாவுக்கு அவ்வளவு கோபம் வரும். இதனாலேயே தன் கடைசி மருமகள் பிரேமிக்கும் லீலாவுக்கும் எப்போதுமே கடுமையான மோதல்கள் இருக்கும். காரணம். பிரேமிக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

இப்படி... தன் கடைசி மருமகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டு இருந்ததில் மற்ற விஷயங்களைக் கோட்டைவிட்டாள் லீலா. பிரேமி திடீரென்று ஒரு நாள், ‘‘ஆன்டி, அங்கிள நீங்க கொஞ்சம் கண்டிக்கணும்’’ என்றபோது, உர் என்று முகத்தை வைத்துக்கொண்டாள் லீலா.

‘‘அவரைப்பற்றிப் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?’’

‘‘நம்ம சண்டைய அப்புறம் வெச்சிக்கலாம். நான் சொல்றது ரொம்ப சீரியஸான மேட்டர். இப்படியே போனா அவரை போலீஸ் பிடிச்சிட்டுப் போயிடும்.’’

‘‘என்னடீ சொல்ற?’’

பிரேமி, மாமியாரின் மிக அருகில் குனிந்து சொன்னாள். ‘‘அங்கிள் பக்கத்து வீட்டுக் குழந்தை களுக்கு திருக்குறள் சொல்லித் தர்றேன்னு என்னமோ தப்பா நடந்துக்குறார்.’’

லீலாவுக்கு பக் என்றது. ‘‘ச்சீ, சும்மா உளறாதே. அவர் ரொம்ப நல்லவர். அபாண்டமா பேசுனா உன் நாக்கு அழுகிடும். முருகா, என் காதுல இதெல்லாம் கேட்கணும்னு இருக்கே’’ என்று குடுகுடுவென பூஜை அறைக்கு ஓடி, விளக்கை ஏற்றி, ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தாள் லீலா.

ஆனால், அவள் மனசு முழுக்க ஷண்முகத்தை பற்றியே சிந்தனை இருந்தது. திருமணமான புதிதில் இருந்து அவள் கணவனுக்கு தாம்பத்யத்தில் கொஞ்சம் கூடுதல் ஈடுபாடுதான். முன் ஒரு காலத்தில் அவன் தன் மைத்துனியோடு தவறாக நடந்துகொள்ள முயன்றபோது லீலாவே அதை நேரில் பார்த்து விட்டாள். அவரோடு கடுமையாகச் சண்டை போட்டிருந்தாள். அதற்கு ஷண்முகம் சொன்ன ஒரே பதில், ‘‘நீ ஒழுங்கா என்னோட ஒத்துழைச்சா, நான் ஏன் இப்படி அவஸ்தைப்படறேன்? உனக்குப் புருஷனைவிட சாமிதானே முக்கியம். இப்படி இருக்குறவ ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட? சாமியாராபோய் தொலஞ்சி இருக்க வேண்டியது தானே. என் வாழ்க்கையாவது நல்லா இருந்திருக்கும்.’’

அதற்குப் பிறகு அவர்களது தாம்பத்ய வாழ்க்கை பெரிதாகத் தொடந்திருக்கவில்லை.

புத்தகங்கள், இலக்கியம், கருத்தரங்கு, சமூக சேவை என்று ஷண்முகம் பொழுதைக் கழிக்க... லீலாவோ கடவுளே கதி என்று இருந்தாள். 

பிரேமி சொன்ன பிறகுதான் லீலா கொஞ்சம் கொஞ்சமாகக் கவனிக்க ஆரம்பித்தாள். பிஸ்கெட்டும், கேக்கும் வாங்கிவந்து அக்கம்பக்கத்துச் சிறுமியர் களுக்குக் கொடுத்து ஷண்முகம் அவர்களுடன் பழகுவதைப் பார்த்தபிறகுதான், அவரை அலட்சிய மாகவிட்டது எவ்வளவு பெரிய ஆபத்து என்று தோன்றியது லீலாவுக்கு.

இரவெல்லாம் தூக்கமே இல்லாமல் புரண்டு கொண்டிருந்த லீலா, திடீரென்று நெஞ்சுவலியால் துடிக்க டாக்டரிடம் அழைத்துப் போனார்கள்.

பரிசோதனையில், ‘‘எல்லா ரிப்போர்ட்டும் நார்மலாதான் இருக்கு’’ என்றார் டாக்டர். பின்னர் ஏன் லீலாவுக்கு நெஞ்சுவலி வருது என்று எல்லோரும் வருந்த... பிரேமி, மாமியாரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். மனசுடைந்த லீலா அழுதுகொண்டே டாக்டரிடம், ‘‘நான் என்ன பண்ணுவேன் டாக்டர்? இந்த வயசுல அந்த மனுஷன் இப்படி நடந்துக்கிட்டா மானம் போகுது. கேட்டா நான் ஒண்ணுமே பண்ணலைன்னு சாதிப்பார். இல்லைன்னா, இந்த வயசுல நான் கூடப் படுக்க வரலைன்னு வெட்கங்கெட்டதனமா ஏதாவது அசிங்கமாப் பேசுவார்.’’

‘‘உங்களுக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலையே. 54 எல்லாம் ஒரு பெரிய வயசில்லை. இந்த வயசுலகூட இப்பெல்லாம் குழந்தை பெத்துக்குறாங்களே!’’

லீலா ஆச்சர்யமாகப் பார்க்க, டாக்டர்

தொடர்ந்தார். பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால், அதனால் கலவியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது. மாதவிடாய் நின்றுவிட்டால், குழந்தைகள் பெரியவர்களாகி விட்டால், பேரன், பேத்தி பிறந்துவிட்டால் என்று ஏதேதோ காரணங்களுக்காகப் பல பெண்கள் கணவனோடு கூடுவதை நிறுத்திவிடுகிறார்கள். ‘‘இந்த வயசுக்கு மேல இதென்ன கர்மம்...’’ என்று அலுத்துக்கொள்கிறார்கள். ‘மாதவிடாய் நின்றுபோன பிறகும் பெண்களால் கலவிக்கொள்ள முடியும்’ என்கிறது அறிவியல். அதுவும் போக, ஆண்களுக்கு வயதுக்குவந்த நாள் தொடங்கி வாழ்நாள் முழுவதும் கலவியல் நாட்டம் இருப்பது இயல்பு. அந்தக் காலம் என்றால், மனைவிக்கு வயதாகிவிட்டதை சாக்காக்கிக்கொண்டு அடுத்த இளம் மனைவியையோ அல்லது இன்னொரு பெண்ணையோ சேர்த்துக் கொள்வது சமூக அங்கீகாரம் பெற்ற நடவடிக்கையாக இருந்தது. ஆனால், இன்று அவை எல்லாம் சட்டவிரோதமானச் செயல், ஒழுக்கக் கேடு என்று கருதப்படுகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்