"சசிகலா புஷ்பாவை பகைத்துக்கொண்ட ஏழு பேர் உயிரோடு இல்லை!"

பகீர் வாக்குமூலம் தரும் பானுமதி!

டியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டார் சசிகலா புஷ்பா. ‘‘எனது கட்சித் தலைவர் என்னைக் கன்னத்தில் அறைந்தார்” என்ற பகீர் புகாரை நாடாளுமன்றத்தில் தெரிவித்த சசிகலா புஷ்பா மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கிளம்புகின்றன.

கடந்த 8-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு பானுமதி என்ற 22 வயது பெண், தன் அக்கா ஜான்சி ராணியுடன் வந்தார். எஸ்.பி-யிடம் கொடுத்த மனுவில், பல அதிர்ச்சிகரமான புகார்களை அவர் சொல்லியிருக்கிறார்.

‘‘நான், 2011-ல் சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு, வீட்டு வேலைக்குப் போனேன். அவர் எப்போதும் கறாராக இருப்பார். சில சமயம் மது போதையில்தான் வீட்டுக்கு வருவார். வந்தவுடன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகக் கட்டிலில் படுப்பார். என்னை மசாஜ் செய்துவிடச் சொல்வார். சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் அசிங்கமாகப் பேசி காலால் எட்டி உதைப்பார். சில சமயங்களில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ‘ஏய் குட்டிச் சாத்தானே... எந்திரிடி! காலை அமுக்கிவிடுடி’ என்று கொடுமைப்படுத்துவார். அவரது கணவரும் ஒருநாள், ‘அக்காவுக்கு மட்டும்தான் நீ மசாஜ் பண்ணிவிடுவாயா? எனக்கும் பண்ணிவிடு’ என்று சொல்லிக் கட்டிலில் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டார். ‘முடியாது’ என்று நான் அழுதேன். ‘மசாஜ் பண்ணவில்லை என்றால், கொன்னுடுவேன்’ என்று என் கன்னத்தில் அடித்தார். வேறு வழியின்றி மசாஜ் செய்தேன். பிறகு, அவருடைய ஆண் உறுப்பில் எண்ணெய் தடவி, ‘மசாஜ் செய்’ என்று கொடுமைப் படுத்தினார். இப்படிப் பலமுறை அவருக்குச் செய்திருக்கிறேன்.

சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப், நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் மேல் வந்து விழுவான். என் மீது கைவைத்து செக்ஸ் டார்ச்சர் செய்வான். இதை சசிகலா புஷ்பாவிடம் சொன்னேன். அவரோ, ‘அவனுக்கு அப்படிப்பட்ட வயசு. அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ. நானும் 18 வயசுல அப்படித்தான் இருந்தேன்’ என்று சொல்வார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்