‘பரபரப்பு' ட்ரம்ப் 'அமைதி' ஹிலாரி!

யார் அமெரிக்க சாய்ஸ்?போட்டி

மெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அனல் இப்போதே ஆரம்பம். ‘உலகமே சுருங்கி விட்டது’ என்று நாம் சொல்வது சும்மா அல்ல... அதனால்தான் நம்மூர் தேர்தல் மாதிரியே அங்கும் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதும் நமக்கு முக்கியம். இதுவரை இருந்த ஒபாமா இனி இல்லை.  அப்படியானால், அடுத்து யார் என்பது நவம்பர் 8-ம் தேதி தெரிந்துபோகும்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் ஆகியோர் இடையே கடும் போட்டி உள்ளது. ‘‘அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக ஆவேன்’’ என ஹிலாரியும், ‘‘சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன்’’ என ட்ரம்ப்பும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய, அதிரடியான கருத்துக்களை ட்ரம்ப் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் ட்ரம்ப்பை, “ஒரு தகுதியற்ற வேட்பாளர்” என அதிபர் ஒபாமா விமர்சிக்க, “அமெரிக்க வரலாற்றில் ஒபாமா ஒரு மோசமான அதிபர்” என ட்ரம்ப் பதிலடி கொடுக்க... நம்ம ஊர் மாதிரியே அங்கும் ரணகளம்.

‘‘ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களை, அமெரிக்காவைவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும்’’ என ஆரம்பித்து, ‘‘சிறந்த அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம்’’ என்பது வரை அதிகாரத் தொனியிலேயே பேசி வருகிறார் என ட்ரம்ப் மீது பல விமர்சனங்கள் வைக்கப் பட்டன. இவர் பேச்சே இவரைத் தோற்கடித்துவிடும் எனப் பலர் நினைத்தபோது, உலக மக்களின் மனநிலை வேறு, தங்களுடைய மனநிலை வேறு என அமெரிக்கர்கள் நிரூபித்தனர். அதனால்தான், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக எந்தவிதச் சிரமமும் இல்லாமல் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்