மனச்சிறையில் சில மர்மங்கள் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உள்ளே ஒரு வற்றாத ஜீவநதி!டாக்டர் ஷாலினி, ஓவியம்: ஸ்யாம்தொடர்

வியர்வையைத் துடைத்துக்கொண்டு பேருந்து நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தான் ராஜு. பேருந்து வரத் தாமதமாக, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அக்கம்பக்கம் வேடிக்கை பார்க்கையில்தான் சுவரில் ஒட்டி இருந்த அந்த மஞ்சள் நிற விளம்பரத்தைப் பார்த்தான். அதைப் பார்த்தவுடன் அவனது அடி வயிறு அவஸ்தைக்கு உள்ளாகியது.

ஏன் இப்படி எல்லாம் பொது இடங்களில் விளம்பரம் செய்கிறார்கள்? கொஞ்சம்கூட நாகரிகமே இல்லாமல், செக்ஸ் பிரச்னையா என்று? பெண்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? பெரியவர்கள்... அம்மாக்கள்... பள்ளிக்குழந்தைகள்! ச்சீ... எழுந்து உலவ ஆரம்பித்தான் ராஜு.

பொது இடங்களில் மட்டுமில்லை. ஏதாவது பத்திரிகை வாங்கிப் படிக்கலாம் என்றால், அதிலும் இப்படித்தான். பரம்பரை பரம்பரையாய் செக்ஸ் பிரச்னைகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்பவர்களைப் பற்றிய விளம்பரங்கள்...

ராஜுவுக்கு 14 வயதிலிருந்து இந்தக் கஷ்டம். இப்போது 20 வயதாகிவிட்டது.

எத்தனை நாளைக்குத்தான் இப்படி அவஸ்தைப்படுவது என்று ஒருமுறை இவன் துணிந்து, அந்த லேகிய மருத்துவரை அவர் தங்கி இருந்த லாட்ஜில் போய்ப் பார்த்தான். அங்கு போகவே அவனுக்கு அவ்வளவு சங்கோஜம்.  இதயம் பக் பக் என்று அடித்துக்கொண்டது. அந்த டாக்டர், வெத்தலை பாக்கு வாயோடு, எகத்தாளமாய் கேட்டார், ‘‘என்ன கை பழக்கமா?’’

இவன் வெட்கம் பிடுங்கித் திங்க... தலையாட்டினான்.

“விந்து முந்துதா?”

“ஆமாம்.”

“எத்தனை நாளா?”

“தெரியலை.”

“இப்படியே பண்ணிட்டு இருந்தா ஆண்மையே இருக்காது. உன் பொண்டாட்டி உன்னைவிட்டுட்டு ஓடிடுவா. இந்த லேகியத்தை ஆறு மாசத்துக்குச் சாப்பிடணும். கை பழக்கத்தை நிறுத்தணும்.”

லேகிய பாட்டில் காலி ஆயிற்று. ஆனால், அவன் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இனிமேல் தொடர்ந்து வாழ்வதா, வேற என்னதான் வழி என்று அவன் தவித்துக்கொண்டு இருந்தான். அவன் வேலை செய்த அச்சகத்தின் உரிமையாளர், ‘‘என்ன பிரச்னைடா, என்கிட்ட சொல்லக்கூடாதா?’’ என்று தனியே அழைத்துப் பேசினார்.

‘‘எனக்கு பயமா இருக்குண்ணே. நெஞ்சு அழுந்துது. வாழவே பிடிக்கலை’’ என்று சொல்லும்போதே கண்கலங்கி, குரல் தடுமாற, ‘‘அண்ணன் இருக்கேன்டா. கவலைப்படாதே. டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்’’ என்று சொல்லி டாக்டரிடம் போனார்கள். அஞ்சி அமைதியாய் இருந்த ராஜுவிடம், டாக்டரே பல கேள்விகளைக் கேட்க அனைத்துக்கும் பதிலளித்தான்.

‘‘இது நம்மூர்ல நிறைய வாலிபர்களுக்கு இருக்குற பிரச்னைதான். பட் டோண்ட் வொர்ரி. ஒண்ணும் பெரிய பிராப்ளமில்லை. நம்ம ஊர்ல ஆண் பிள்ளைகளுக்கு அவங்க உடம்பைப் பற்றியும் அதன் செயல்பாட்டைப் பற்றியும் யாரும் சொல்லித் தர்றதில்லை. அதனால்தான் நார்மல் உடல் இயக்கத்தைப் பார்த்தே பயப்படுற நிலைமை.’’

‘‘அப்படினா பொண்ணுங்களுக்குத் தன்னைப்பற்றி எல்லாமே தெரியுமா டாக்டர்?’’

“பொண்ணுங்க வயசுக்கு வந்தா மற்ற பெண்கள், தங்கள் அனுபவத்தைச் சொல்லி, அந்தப் பொண்ணுக்கு புரியவெப்பாங்க. இதெல்லாம் அவங்களோட வழக்கமான சமாசாரங்கள். ஆனா, ஆம்பளைங்க யாரும் இதுபற்றி வெளிப்படையாப் பேசிக்கிறதில்லை.’’

தொடர்ந்து டாக்டர் படம் படமாய் வரைந்து விளக்கங்கள் சொல்ல, ராஜுவும் நிம்மதி பெருக கேட்டுக்கொண்டான்.

‘‘மனித உடம்பில் உள்ள எல்லாச் செல்களிலும் 46 குரோமோஸோம்கள் இருக்கும். ஆனால், இனபெருக்கச் செல்களில் மட்டும் 23 குரோமோஸோம் கொண்ட உயிரணுக்கள் இருக்கும். அப்படி ஆண் உடம்பில் உற்பத்தியாகும் இனபெருக்கச் செல்லுக்கு விந்தணு, ஸ்பர்ம் என்று பெயர். பெண் உடம்பில் உற்பத்தியாகும் செல்லுக்கு கருமுட்டை, ஓவம் என்று பெயர். இரண்டிலுமே 23 குரோமோஸோம்கள்தான் என்றாலும், பெண் உற்பத்தி செய்யும் செல் மிகப் பெரியது. பெண் உடலில் முதன்முதலில் கருமுட்டை உற்பத்தி தொடங்கினால், அந்த பெண் பூப்பெய்து, வயதுக்கு வந்துவிட்டதாக அர்த்தம். அதேபோல, ஓர் ஆணின் உடம்பில் விந்தணுக்களின் உற்பத்தி தொடங்கிவிட்டால், அவன் வயதுக்கு வந்துவிட்டான் என்று அர்த்தம்.

பெண் உடம்பில் மாதத்துக்கு ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே உருவாகும். ஆனால், ஆணுக்கு தினமும் 100–200 மில்லியன் விந்தணுக்கள் உருவாகும். இந்த விந்தணுக்கள் நீந்திப்போக, அவன் விரைப்பை குழாய்களில் நிறைய போஷாக்கு நீரும் உற்பத்தியாகிறது. இப்படியாக ஒரு நாளைக்கு 2–5 மில்லி திரவியம் அவன் விரைகளில் உருவாகின்றன. இது இப்படி இருக்க... விடியற்காலை வேளையில், 3-5 மணியளவில் மூளையில் இருக்கும் பிட்யூட்டரி சுரபி, வளர்ச்சிக்கான ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பாலியல் ஹார்மோன் என அன்றாடத் தேவைக்கான பல ஹார்மோன்களைச் சுரக்கிறது. இப்படி ஆணின் உடலில் டெஸ்டோச்டிரொன் என்கிற பாலியல் ஹார்மோன் ஊறிய உடனே அவனது மனம் எந்தவித முன்னேற்பாடும் இன்றி கலவியல் கனவுகளுக்கு உள்ளாகும்.  டெஸ்டோச்டிரொன் அவனது விரை அழுத்தத்தை அதிகரிப்பதால், அவனுடைய விந்தணுக்கள் எல்லாம் வெளியேறும். இப்படி ஒருவனுக்கு தினசரி விந்து வெளியேறினால் அவன் உடல் சரியாக இயங்குவதாய் அர்த்தம்.  யாருக்காவது இப்படி வெளியேறவில்லை என்றால், அவன் உடம்பில் உற்பத்தியே இல்லை அல்லது தடைபட்டிருக்கிறது என்று அர்த்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்