கிண்டி ரேஸ் கிளப் தேர்தல்...

களம் இறங்கும் செட்டிநாடு வாரிசுகள்!பந்தயம்

ரண்மனைக்குள் தொடங்கும் பங்காளிச் சண்டை பரம்பரை பரம்பரையாக நீடிக்கும். அதற்கு உதாரணமாகி இருக்கிறது செட்டிநாட்டு  வாரிசுகளின் வரலாறு.

ப.சிதம்பரம் - அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம்... எம்.ஏ.எம்.ராமசாமி - அவர் வாரிசு அய்யப்பன் என்ற எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா... எம்.ஏ.சிதம்பரம் - அவர் மகன் ஏ.சி.முத்தையா... இவர்கள்தான் செட்டிநாட்டு அரச குடும்பத்தின் இன்றைய ‘ஐகான்’கள். அரசியல், அதிகாரம், தொழில் - வியாபாரங்கள் என்று வலம்வரும் இந்தச் செட்டிநாட்டு இளவரசர்களை மோதவிடத் துடிக்கிறது, ‘சென்னை ரேஸ் கிளப்’.

தமிழகத்தில் குதிரைப் பந்தயம் நடத்தும் அதிகாரபூர்வ அமைப்பு ‘சென்னை ரேஸ் கிளப்’ 1896-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இதில், 1,100 பேர் உறுப்பினர்கள். இவர்கள் ஓட்டுபோட்டு 12 கமிட்டி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அரசாங்கம் 4 பேரை கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கும். இந்த 16 நபர்கள்தான், ரேஸ் கிளப்பின் அதிகார மையங்களாக இருப்பார்கள். இவர்கள் வைத்ததுதான் சட்டம். இவர்கள் போடுவதுதான் திட்டம். கிளப் சேர்மனையும் இவர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள். இந்த 16 கமிட்டி உறுப்பினர்களில், 4 பேருக்கான பதவிக்காலம் இந்த மாதத்தோடு முடிகிறது. அவற்றுக்கான தேர்தல் இந்த மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதில் வென்று,  4 இடங்களையும் கைப்பற்ற, செட்டிநாட்டு வாரிசுகளைக் களத்தில் இறக்கத் துடிக்கின்றனர் சிலர். 

காரணம், 1973-ம் ஆண்டு தடை செய்யப்பட்டு, மீண்டும் குதிரைப்பந்தயத்துக்கு உச்ச நீதிமன்றம் 1995-ல் அனுமதி அளித்தது. அன்றில் இருந்து, ‘சென்னை ரேஸ் கிளப்’, செட்டிநாட்டு அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அண்மையில் காலமான செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம்.ராமசாமியின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. அவர் கைகாட்டும் ஆட்கள்தான், உறுப்பினர்கள்; அவர் சொல்லும் நபர்கள்தான் கமிட்டி உறுப்பினர்கள்; அவருக்குப் பிடித்த குதிரைகள்தான் பந்தயத்தில் ஓடும். அதோடு, செட்டியார் சமூகத்தினரே கிளப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தினார்கள். சென்னை ரேஸ் கிளப்பில் இருந்த 540 குதிரைகளில் 340 குதிரைகள்

எம்.ஏ.எம்-க்குச் சொந்தமானவை. மற்ற 200 குதிரைகள் யாருடையவை என்பது யாருக்கும் புரியாத மர்மமாக இருந்தது. புதிதாக ஒருவர், குதிரையைக் கொண்டு வந்து கிளப்பில் உறுப்பினராகச் சேர நினைத்தால், அது நடக்காது. சிலபல கண்டிஷன்களைச் சொல்லி நிராகரித்துவிடுவார்கள். இதனால், பந்தயங்கள் அனைத்தும் முறைகேடுகளாக நடைபெற்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகாலமாக இருந்தாலும், எம்.ஏ.எம் இருந்தவரை யாரும் எதிர்த்துக் கேட்கவில்லை. பொதுக்குழுவும், தேர்தலும் நடத்தப்படவில்லை. இதனால், உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருந்தவர்கள்,  அண்மையில் எம்.ஏ.எம் இறந்ததை அடுத்து, ஆக்‌ஷனில் இறங்கி உள்ளனர். அவர்களுக்குச் சாதகமாக கிளப்பில், 4 கமிட்டி உறுப்பினர்களின் பதவிக்காலம் தற்போது முடிய உள்ளது. அந்த இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம், ஆண்டாண்டு காலமாக, எம்.ஏ.எம் ஆதிக்கத்தில் இருந்த ரேஸ் கிளப்பை மீட்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இந்த வியூகத்தின் சக்திவாய்ந்த அஸ்திரம் வேறு யாருமல்ல...

எம்.ஏ.எம்-மின் இறுதிநாட்களில், அவருக்கும் அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்த, வளர்ப்பு மகன் அய்யப்பன்தான். அய்யப்பன் வந்தால், இவ்வளவு நாட்களாக எம்.ஏ.எம் ஆதரவில் கொழித்துக் கொண்டிருந்தவர்களைத் துரத்தியடித்து, கிளப்பை சுத்தமாக்குவார் என்பது அவர்கள் எண்ணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்