பிரதமரின் மகிழ்ச்சியும்... முதல்வரின் அச்சமும்!

டெல்லி... மாஸ்கோ... சென்னை... கூடங்குளம்!அணுஉலை

கூடங்குளம் அணுமின் நிலையம் இப்போது 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 28 ஆண்டுகள் கழித்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டுவிட்டது. ராஜீவ் காந்தியும் கோர்ப்பசேவும் போட்ட ஒப்பந்தத்தை நரேந்திர மோடியும் விளாதிமீர் புடினும் அமல்படுத்தி இருக்கிறார்கள். கடந்த 10-ம் தேதி டெல்லி, மாஸ்கோ, சென்னை, கூடங்குளம் ஆகிய நான்கு இடங்களில் இருந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்து முடிந்துள்ளது.

மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மின்தேவையும் அதிகமாகி வருகிறது. அதனைச் சமாளிக்க அணு மின்சாரம் தயாரிப்புத் தவிர்க்க முடியாதது என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டு வருகிறது. அதே அணுசக்தியின் ஆபத்துகள் குறித்த அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்திய - ரஷ்ய ஒப்பந்தம்!

1988-ம் ஆண்டு நவம்பர் 20-ம் நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய பிரதமர் மிக்கேல் கோர்ப்பசேவும் இணைந்து கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார்கள். இரண்டு நாடுகளுக்குமான நல்லுறவு இதற்கு அடித்தளம் அமைத்தது. தொடக்கத்தில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.

சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட பிளவு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அணுஉலை அமைப்பது மிகவும் தாமதமானது. 10 ஆண்டுகள் கழித்து இறுதி ஒப்பந்தங்கள் எல்லாம் பேசி முடிக்கப்பட்டு அணுஉலையின் கட்டுமானப் பணிகள் 1998-ல் ஆரம்பிக்கப்பட்டன. கட்டுமானப் பணிகளை இந்தியா செய்வது என்றும் தொழில்நுட்ப உபகரணங்களை ரஷ்யா வழங்குவது என்றும் முடிவானது. அப்போது இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவரும் ரஷ்ய அதிபர் புடினும் போட்ட ஒப்பந்தப்படி இரண்டு அணுஉலைகள் அமைப்பது, இரண்டும் தலா  1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 13,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, 2008-ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்துக்காக 22,000 கோடி ரூபாய் செலவு ஆகி இருக்கிறது.

யாருக்கு எவ்வளவு மின்சாரம்?

2013-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி முதல் அணு உலையில் மின் தயாரிப்புத் தொடங்கியது. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் விகிதாசார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்துக்கு 563 மெகாவாட், கேரளாவுக்கு 133 மெகாவாட், கர்நாடகாவுக்கு 221 மெகாவாட், தெலங்கானாவுக்கு 50 மெகாவாட், பாண்டிச்சேரிக்கு 33 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்