"ஒரு பெண்ணுக்கு உதவி செய்தது தவறா?"

சசிகலா புஷ்பாவின் நண்பர் பிலால் கேட்கிறார்!பேட்டி

சிகலா புஷ்பாவின் விவகாரத்தில் அடிபடும் பெயர்களில் ஒன்று பிலால்! அ.தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகம் ஆன பெயர். அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வழங்கும் பொறுப்பில் பல ஆண்டுகளாக தலைமைக் கழகத்தில்  வேலை பார்த்தவர்தான் இந்த பிலால். கடந்த ஜனவரி மாதமே அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து விலகி விட்டார். இப்போது சசிகலா புஷ்பா ரூபத்தில் இவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி சிவா விவகாரத்தில், சசிகலா புஷ்பா விசாரணைக்காக கார்டனுக்கு அழைக்கபட்ட தினத்தன்று, பிலாலையும் கார்டனுக்கு வரச்சொல்லி ஜெயலலிதா விசாரித்தார். பல்வேறு உண்மைகளை பிலால் அப்போது முதல்வரிடம் சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்கள். சசிகலா புஷ்பா, பிலாலுக்கு கேக் ஊட்டும் போட்டோகளும், வாட்ஸ் அப்களில் உலவின. “சசிகலா புஷ்பா கூட பிலால்னு ஒருத்தர் இருந்தார். அவரும் எங்களை ரொம்ப டார்ச்சர் செய்தார். சசிகலா புஷ்பாவுக்கு அவர் தாலி கட்டித் திருமணம் செய்துள்ளார்” என்று சசிகலா வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இரண்டு  பெண்கள் தூத்துக்குடியில் அளித்த புகாரில் கூறி உள்ளனர். இந்த விவகாரத்தில் பிலால் சிக்கியது எப்படி? என்ற கேள்விகளோடு பிலாலை தொடர்பு கொண்டோம். நம்மிடம் கண்ணீர் மல்கப் பேசினார். “நான் பதினைந்து ஆண்டுகாலம் அ.தி.மு.க-வே கதி என்று கிடந்தவன். அம்மாதான் உலகம் என்று வேலை செய்துவந்தேன். ஆனால் என் மீது இப்படி ஒரு களங்கத்தைச் சுமத்திவிட்டார்கள்” என்று தொடர்ந்தவர்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்