நிலம்... நீர்... நீதி!

இணைந்த கைகள்... உயர்ந்த கரைகள்!

யற்கையைச் சிதைத்தால் அதன் எதிர்விளைவு என்னவாக இருக்கும் என்பதைத்தான் கடும்வறட்சி, ஆழிப்பேரலை, பெருமழை, புயல் என்பது உள்ளிட்ட பேரழிவுகளின் வாயிலாக இயற்கை நமக்குச் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது. இப்படித்தான் கடந்த ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி எனக் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது பெருமழை. வரலாறு காணாத பெருமழைதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும்... காலங்காலமாக மழை நீரை ஏந்திப்பிடித்துத் தக்கவைத்துக் கொண்டிருந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்ததும் அவற்றைப் பராமரிக்காமல் விட்டதும்தான் முக்கியக் காரணங்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.

அந்த மழைநாட்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் உடனடியாகப் பங்கெடுத்துப் பல்வேறு பணிகளை ஆற்றிய விகடன் குழுமம்... இப்பாதிப்புகள் இனி வருங்காலங்களில் நிகழக் கூடாது என தொலைநோக்குடன் யோசித்தபோது உருவானதுதான், ‘நிலம்... நீர்... நீதி!’ எனும் திட்டம். விகடன் குழுமத்தின் அறப்பணிகளை மேற்கொண்டுவரும் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் இப்பணி முன்னெடுக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் விகடன் குழுமம் மூலம் ஒதுக்கப்பட்டது. எப்போதும் இப்படிப்பட்ட பணிகளில் விகடனுடன் கைகோக்கத் தயாராக இருக்கும் வாசகர்களும் இணைந்துகொள்ள... மொத்த நிதி இரண்டே கால் கோடியைத் தாண்டியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்