நடிகை மோகத்தில் அ.தி.மு.க. நிர்வாகி!

மீட்டுக் கொடுத்த காவல் துறை...விசாரணை

ழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களைப் போல ‘மேன் - மிஸ்சிங்’ புகார்களுக்கும் தமிழகத்தில் பஞ்சம் இல்லை. ‘நடிகையிடம் இருந்து என் கணவரை  மீட்டுத் தாருங்கள்’ என்ற புகார் மனுவுடன் சென்னை போலீஸ் கமிஷனரைச் சந்தித்தார் உமாதேவி.

புகாரைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த உமாதேவி, `` `சுந்தரா டிராவல்ஸ்’ பட  நாயகி ராதாவின் பிடியில் என் கணவர் முனிவேல் சிக்கியுள்ளார். அவரை மீட்டுத்தாருங்கள் என்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்றவர், ``பொதுவெளியில் இதைப் பற்றி பேச முடியாத நிலையில் இருக்கிறேன், போனில் பேசுங்களேன்” என்று நம்பரைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

உமாதேவியிடம் போனில் பேசினோம். ``என்னை ஒதுக்கும் அளவுக்கு என் கணவர் மோசமான ஆள் இல்லை. என்னை காதல் திருமணம் செய்தவர். எங்களின் 21 ஆண்டு இல்லற வாழ்க்கையில் அவரிடம் இதுபோன்ற குறைகளையே நான் பார்த்ததில்லை. எங்களுக்கு பள்ளி, கல்லூரிக்குச் செல்கிற பிள்ளைகள் உள்ளனர்.

அவர்கள் இன்னும் மேலே படிக்க வேண்டும், அவர்களுக்கு நல்லபடியாக திருமணம் ஆக வேண்டும், அப்பாவின் அரவணைப்பு அவர்களுக்கு மிகவும் அவசியம். ‘என் கணவரை என்னிடமே கொடுத்துவிடு’ என்று ராதா வீட்டுக்கே போய்க் கேட்டேன். அதற்கு, ‘உன்னிடம் அவரை ஒப்படைக்க முடியாது, வேண்டுமானால் நீ டைவர்ஸ் வாங்கிக்கொண்டு எங்காவது ஓடிப்போய் விடு. இதற்கு மேல் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டினார். அதனால்தான் போலீஸ் உதவியை நாடினேன். அதிகபட்சமாக அவளுக்கும், என் கணவருக்கும் தொடர்பு உண்டாகி ஒன்றரை மாதங்கள்தான் இருக்கும். அவர் அரசியலில் இருப்பதால் ஏதாவது உதவிக்கு வந்து அதன் மூலம் பழக்கமாகி இருக்கும் என்று நினைக்கிறேன். ராதாவின் வீட்டுக்குப் போய் நியாயம் கேட்டுவிட்டு வந்த பிறகு என்னுடைய செல்போனுக்கு நிறைய மிரட்டல்கள் வந்தன’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்