அரசை ஏமாற்றி விருது!

நகராட்சி அட்ராசிட்டி ராமநாதபுரம் அவலம் - 3

கர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் சிறந்த நகராட்சிக்கான சிறப்புப் பரிசை, ராமநாதபுரம் நகராட்சி தட்டிச் சென்றிருக்கிறது.

ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் சந்தானலெட்சுமியிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் சான்றிதழும் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டன. இதைப் பற்றி ராமநாதபுரம் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

‘‘இது, எங்கள் மாவட்டத்தின் தலைநகர். ஆனால், அடிப்படை வசதிகளில் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் அளவுக்குக்கூட இல்லை. காசு கொடுக்காமல் நகராட்சியில் எந்த வேலையும் நடக்காது. காசு கொடுத்தாலும்கூட ஆமை வேகத்தில்தான் பணிகள் நடக்கும். நகராட்சிப் பேருந்து நிலையம் திறந்தவெளிக் கழிப்பிடமாகவே காட்சி அளிக்கிறது” என்று வெதும்பினார், ராமநாதபுரம் சிறுவியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்