செல்லூர் ராஜுவின் கண்ணாமூச்சி!

வைகை ஆற்றில் கபடி...விதிமீறல்

டாகூடமாக எதையாவது செய்வதில் அமைச்சர் செல்லூர் ராஜுவை மிஞ்ச ஆள் கிடையாது. முதல்வர் ஜெயலலிதாவுக்காக அவர் முன்பு நடத்திய பிரமாண்ட பூஜைகள், தூக்கிய பால்குடங்கள், காவடிகள் அரசியல் உலகில் அதி ஃபேமஸ். இப்போது செல்லூர் கையில் எடுத்துள்ளது கபடி விளையாட்டை. இதுவரை அவர் நடத்தியது எல்லாம் காமெடியாக முடிய, கபடி மேட்டர் கொஞ்சம் சீரியஸ் ஆகிக்கொண்டு இருக்கிறது.

நீர்த்தடங்களின் ஆக்கிரமிப்பு பற்றிச் சூழலியலாளர்கள் போராடி வருகிறார்கள். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவோ, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் மதுரை வைகை ஆற்றுக்குள், தனியார் அமைப்பு ஏற்பாடு செய்த மாநில அளவிலான கபடிப் போட்டியை நடத்துவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து, தொடங்கி வைத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்