கழுகார் பதில்கள்!

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

சாவிக்கு 100 வயது..?

நான்காம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். 60 ஆண்டுகள் எழுதினார். 100 ஆண்டுகள் கழித்தும் படிக்கப்படுகிறார். பத்திரிகை உலக வரலாற்றில் எப்போதுமே படிக்கவேண்டிய பாடம் அவர். தனது பெயரிலேயே பத்திரிகையும் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியவர் சாவி. காந்தியுடன் போய், ‘நவகாளி யாத்திரை’யும் எழுதுவார். வாஷிங்டனில் திருமணம் என்று நகைச்சுவையும் படைப்பார். கருணாநிதி இவருக்காகவே ‘குங்குமம்’ ஆரம்பித்தார். அதற்காக இவர் எம்.ஜி.ஆர் பற்றி எழுதாமல் விடவில்லை. ‘தோட்டம் முதல் கோட்டை வரை’ இவரது அருமையான படைப்பு.

விசித்திரன், ஹனுமான், சந்திரோதயம், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணி கதிர் எனப் பல பத்திரிகைகளில் வேலை பார்த்தார். மோனா, சுஜாதா, திசைகள், பூவாளி, விசிட்டர் லென்ஸ், சாவி எனப் பல பத்திரிகைகளை நடத்தினார். எழுத்தாளனுக்கு கட் அவுட் வைத்த எழுத்தாளர். ‘‘ஒவ்வோர் இதழையும் கல்யாணம் மாதிரி நடத்தணும்’’ என்று கட்டளையிட்ட பத்திரிகையாளர்.

பத்திரிகை உலகத்துக்கு சாவி. கதை உலகத்துக்கு கதவு. ஜனரஞ்சக இலக்கியத்தின் வீடு!


என்.காளிதாஸ், சிதம்பரம்.

‘‘ஆந்திர மாநிலச் சிறையில் இருக்கும் 32 தமிழர்களை விடுவிக்க முடியாது’’ என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லி இருக்கிறாரே?

செம்மரக் கடத்தல் வழக்கில் சிக்கியும், மரம் வெட்ட அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்றும் ஆந்திர சிறையில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இரண்டு வழக்கறிஞர்களைத் தமிழக அரசு நியமித்து உள்ளது. அவர்கள் தங்களது முதல்கட்ட விசாரணையை இன்னமும் தொடங்கவில்லை. அதன்பிறகுதான் இந்த விவகாரத்தின் முழு உண்மைகளும் தெரியவரும்.

அதற்கு முன்னதாகத் தமிழக அரசின் பிரதிநிதியை அனுப்பி ஆந்திர மாநில அரசுடன் பேச முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்பாடுசெய்ய வேண்டும். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள்தான் இப்படிக் கைதாகி ஆந்திர மாநிலச் சிறைகளில் இருக்கிறார்கள். இவர்கள், தாங்கள் கோயிலுக்குச் சென்றோம், கட்டட வேலைகளுக்காகச் சென்றோம் என்று சொல்கிறார்கள். ஆந்திர மாநிலத்துக்குள் எந்தக் கூலி வேலைக்காகச் சென்றாலும் கைது செய்து மரம் வெட்ட வந்தார்கள் என்று கைதுசெய்கிறார்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

‘‘தமிழக அரசியலில் இருந்து என்னைத் தனிமைப்படுத்தப் பார்க்கிறார் கருணாநிதி’’ என்று சொல்லி இருக்கிறாரே வைகோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்