"மனைவி சத்தியபாமா மனுஷியே இல்லை!"

திருப்பூர் எம்.பி-க்கு கெடு வைக்கும் கணவர்!புகார்

ரசியல் வரலாற்றில் அசுர வேகத்தில் வீசிக்கொண்டிருக்கும் சசிகலா புஷ்பா புயல், ஜெயலலிதாவையே அதிரடித்திருக்கிறது. அதற்கு சற்றும் சளைக்காது போலிருக்கிறது திருப்பூர் எம்.பி-யான சத்தியபாமாவுக்கு எதிராக வீச ஆரம்பித்திருக்கும் புயல். இதிலும் சசிகலா புஷ்பா பெயர் அடிபடுவதால், அடுத்த அதிர்வலைகளைச் சந்திக்கப்போகிறது அ.தி.மு.க.

திருப்பூர் எம்.பி-யான சத்தியபாமாவைக் காதலித்துக் கரம்பிடித்தவர் எலந்தக்காடு கிராமத்தைச் சேர்ந்த வாசு. தனது வலது கையில் ஜெயலலிதாவின் படத்தைப் பச்சைக்குத்தி வைத்திருக்கும் அளவுக்கு அ.தி.மு.க விசுவாசி அவர். அவரின் அரசியல் செல்வாக்கால் கோபிச்செட்டிப்பாளையம் சேர்மன் பொறுப்புக்கு வந்தார் மனைவி சத்தியபாமா. அடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் சத்தியபாமா போட்டியிட விரும்பினார். அதிலிருந்து இவர்களின் வாழ்க்கையில் சிக்கல் ஆரம்பித்தது.

வாசுவை சந்திப்பதற்காக, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் எலந்தக்காடு கிராமத்துக்குச் சென்றோம். சிறிய ஓட்டு வீடு ஒன்றில் வசித்துவரும் வாசு, மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார்.

‘‘விவாகரத்து கோரி கோர்ட் படியேறி இருக்கிறீர்களாமே?” என்றோம். கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க நம்மிடம் பேசத்தொடங்கினார்.

“நான் கட்சியில தீவிர விசுவாசி. கோபிச்செட்டிப்பாளையம் சேர்மன் பொறுப்புக்கு என் மனைவியை நிறுத்தி ஜெயிக்க வெச்சேன். எங்க வாழ்க்கை நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் ஊழியர் கூட்டம் நடந்துச்சு. அதுல கலந்துக்க சசிகலா புஷ்பா வந்தாங்க. ‘வர்ற தேர்தல்ல உங்களுக்கு சீட் வாங்கித்தர்றேன். எனக்கு ஒரு கோடி ரூபாய் குடுங்க’ன்னு சசிகலா புஷ்பா கேட்டுருக்காங்க. உடனே, என் மனைவி என்னை நச்சரிக்க ஆரம்பிச்சா. ‘நமக்கு சேர்மன் பதவியே போதும்... இதுக்கு மேல பதவி வந்தா குடும்பமே கோளாறாயிடும்’னு சொன்னேன். ரொம்ப அடம் பிடிச்சாங்க. அதனால ரூ.50 லட்சம் கடன் வாங்கிக் குடுத்தேன். அது போதாதுன்னு இன்னும் பணம் கேட்டாங்க. என்கிட்ட பணம் இல்லைன்னு சொன்னேன். உடனே எனக்கு ஏதோ சிகிச்சை எடுக்கணும்னு சொல்லி, என்னைக் கொண்டுபோய் கேரளாவுல ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிட்டாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்