ம.தி.மு.க-வினரைக் கோயில் கட்டிக் கும்பிடவேண்டும்!

நிர்வாகிகள் கூட்டத்தில் உருகிய வைகோநெகிழ்ச்சி

டும் தோல்விக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளிடம் மனம்திறந்து பேசி இருக்கிறார் வைகோ.

மூன்றாவது அணியை அமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த ம.தி.மு.க., கடும் தோல்வி அடைந்தது. தோல்விக்குப் பின்னர் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாகக் கடந்த 14-ம் தேதி சென்னை, தாயகத்தில் ம.தி.மு.க-வின் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

‘‘கடைசி நேரத்தில் தேர்தலில் நீங்கள் போட்டியிடாமல் இருந்தது தவறு” என்றும், ‘‘நீங்களே முதல்வர் வேட்பாளர். உங்களை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டுமே தவிர, நீங்களே இன்னொருவரை முன்னிலைப்படுத்தி ஓட்டு கேட்டது தவறு” என்றும், ‘‘எனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்று நீங்கள் இனி சொல்லக் கூடாது” என்றும் நிர்வாகிகள் ஆவேசப்பட்டனர்.

“இதே மாதம் இதே வாரத்தில் பேரறிஞர் அண்ணா முன்னிலையில் 52 ஆண்டுகளுக்கு முன்னால் பேசினேன். இத்தனை ஆண்டுகால வாழ்கையில் எத்தனை சூறாவளிகள், எரிமலையின் தாக்குதல்கள், பழிச்சொற்கள், போராட்டங்கள் என எல்லாவற்றையும் கடந்து வந்திருந்தாலும், இவ்வளவு தோல்விகளுக்குப் பிறகும் இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கிற வீரர்களை நினைக்கிறபோது பக்தர்கள் சொல்வதைப் போல், இவர்களுக்குக் கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும். இந்த இயக்கத்தில் தியாக மனப்பான்மை  இருக்கிறது. திறமை வாய்ந்தவர்கள் என்னுடன் இருந்து கஷ்டப்படுகிறார்களே என்று கலங்குகிறேன். தோழர்கள் கட்டிக் கொடுத்த தாயகம் கட்டடம், கட்சிக்கு என்று பத்திரிகை, ஏழு மாவட்டங்களில் கட்சி அலுவலகக் கட்டடங்கள், தமிழகம் முழுவதும் கட்சி என எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது. எத்தனை சோதனைகள் வந்தபோதும் கட்சியை, இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த முடிகிறது. இது என் சக்திக்கு மீறிய சாதனையாகத்தான் கருதுகிறேன். தகுதி, திறமை இருந்தும் 22 வருடங்களாக அரசியல் அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கும் சூழல் என்னை வாட்டி வதைக்கிறது.

இங்கு பேசியவர்கள் எனக்குக் கட்டளையிட்டு உள்ளார்கள். உங்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறேன்.  ‘இனிமேல் அந்தப் பதவிக்கு வரமாட்டேன். இந்தப் பதவிக்கு வரமாட்டேன் என்று பேச மாட்டேன், உங்களுடைய உத்தரவுகளை ஏற்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்