கோட்டைகளில் மட்டுமா... கோயிலிலும் தேசியக் கொடி - வழிகாட்டும் சிதம்பரம்!

கெளரவம்

தெய்வ பக்தியோடு சேர்த்து தேச பக்தியையும் வெளிப்படுத்தி இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில். ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், மாவட்ட தலைநகரங்களில், பள்ளிகளில் கொடி ஏற்றுவார்கள். ஆனால், கோயில்களில் திருவிழா நேரத்தில்தான் கோயில் கொடி ஏற்றம் நடக்கும். இதோ சிதம்பரத்தில் வித்தியாசமான ஒரு காட்சி... 

கஸ்ட் 15-ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் என்ன நடந்தது தெரியுமா?

நடராஜர் சிலை முன்பாக நமது தேசியக் கொடி வெள்ளித்தட்டில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர், மேளதாளத்துடன் கொடி எடுத்துவரப்பட்டு 152 அடி உயரமுள்ள கிழக்குக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது. இதுபோல இந்தியாவில் வேறு எந்தக் கோயில்களிலும் நடைபெற்றது இல்லை.

இதுகுறித்து தீட்சிதர் வெங்கடேசன், “சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் என்றால், நமது தேசியக் கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றி அதற்கு மரியாதை செய்வதுதான் வழக்கம். ஆனால், கோயில்களில் செய்வது இல்லை. இந்தியாவிலேயே சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும்தான் தேசியக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல... சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து தொன்றுதொட்டு நடக்கும் நிகழ்வு.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அதிகாலையில் தேசியக் கொடி நடராஜர் முன்பாக வெள்ளித்தட்டில் வைத்து அர்ச்சனை செய்யப்படும். பின்னர், அது மேளத்தாளத்துடன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்து, 152 அடி உயரமுள்ள ஆலயத்தின் கிழக்குக் கோபுரத்தில் ஏற்றப்படும். அப்போது கோபுரத்தின் அடிவாரத்தில் தேசியகீதம் பாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்படும். மாலை ஆறு மணிவரை கோபுரத்தின் உச்சியில் கொடி பறந்துகொண்டேயிருக்கும். சிதம்பரம் கோயில், பொது தீட்சிதர்கள் நிர்வாகத்தில் உள்ளது. அப்படியிருந்தாலும் நாம் எப்போதும் தேசியத்தின் பக்கம்தான். நாம் எல்லோரும் இந்தியன் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் இந்த நிகழ்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்