"காவிரி ஆற்றில் மரணக்குழிகள்!"

கலக்கத்தில் கரூர் மாவட்ட மக்கள்!விதிமீறல்

மிழகத்தில் இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்குவது, சுரண்டலுக்குத் துணைபோவதும் தொடர்கதையாகி வருகிறது.

கரூர் மாவட்டம், காவிரி ஆற்றில் கடம்பங்குறிச்சி, புகழூர், தவுட்டுப்பாளையம், நடையனூர், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் புதிதாக மணல் குவாரி அமைக்க 2015 டிசம்பரில் அனுமதி கொடுத்தது அரசு. இப்போது செயல்படத் தொடங்கியுள்ள கடம்பங்குறிச்சி மணல் குவாரிக்கு எதிரான போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 14-ம் தேதி, தவுட்டுப்பாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஏட்டிக்குப்போட்டியாக, தவுட்டுப்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தியின் கணவர் ஜெயசக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குவாரிக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினரோ, மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்