மிஸ்டர் கழுகு : கோட்டையைச் சுற்றி அகழி!

இரும்புத்திரை!

'கோட்டையைச் சுற்றி அகழி. இரும்புத்திரை’ என கழுகார் அனுப்பிய செய்தி வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. அட்டை வடிவமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது கோட்டையில் இருந்து கழுகார் வேர்வைக் குளியலோடு ஆஜர் ஆனார்.

‘‘எதிரிகள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கோட்டையைச் சுற்றி அகழியைக் கட்டி வைத்திருப்பார்கள் அரசர்கள். அப்படித்தான் ஆங்கிலேயர்கள் கட்டுப்​பாட்டில் இருந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அகழி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது, அந்த அகழிக்கு முன்பு காக்கி படை குவிக்கப்பட்டிருந்தது. சஸ்பெண்ட் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கோட்டைக்குள் நுழைந்து​விடக் கூடாது என்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு இது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடியை ஜெயலலிதா ஏற்றியபோது அந்தப் பகுதியில் அணிவகுப்பில் இருந்த போலீஸை தவிர்த்து பாதுகாப்பில் இருந்த போலீஸ் எண்ணிக்கை வெறும் ஐநூறுதான். சரியாக 7 நாட்கள் கழித்து ஆகஸ்ட் 22-ம் தேதி கோட்டையில் குவிக்கப்​பட்ட காக்கிகளின் எண்ணிக்கை 1,300. சுதந்திர தினத்தைவிட காவல் துறை மானிய கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகம் என்பது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிந்தது.’’

‘‘கோட்டையில் நடந்ததைச் சொல்லும்’’

‘‘கோட்டைக்குள் நுழையும் அத்தனைப் பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு முன்பு நூற்றுக்கணக்கில் போலீஸ் நிறுத்தப்பட்டிருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை மிரட்டத்தான் இந்தக் கெடுபிடிகள். ‘நமக்கு நாமே என்று ஊர் ஊராகச் சுற்றி திரிந்தவர்களால் கோட்டையைப் பிடிக்க முடியாது’ என கடந்த வாரம் சட்டசபையில் திரி கொளுத்தி போட்டார் அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரன். பிறகு நடந்த கூச்சல், குழப்பம், அமளி துமளி​களுக்குப் பின் ஸ்டாலின் உட்பட தி.மு.க-வினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அடுத்த நாள் சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைய முயன்ற ஸ்டாலின் உட்பட தி.மு.க. உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட, கோட்டை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தை தி.மு.க. அரங்கேற்றியது அதற்கு அடுத்த நாள் போட்டி சட்டசபையை நடத்தி கோட்டை வளாகத்தை மட்டுமல்ல; தமிழகத்தையே கலகலப்பாக்கினார்கள் தி.மு.க-வினர். சபாநாயகராக துரைமுருகன் நடித்துக் காட்டிய அந்தப் போட்டி சட்டசபை, டி.வி. சேனல்களில் நேரடியாக ஒளிப்பரப்பாக... அ.தி.மு.க அரண்டு போனது. போட்டி சட்டசபை காட்சிகளைப் பார்த்த மேலிடம் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது.’’

‘‘ம்.’’

‘‘ ‘கோட்டை வளாகத்துக்குள்யே அரசை நையாண்டிசெய்த தி.மு.க-வினரை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்​கொண்​டி​ருந்​தார்களா?’ என போலீஸ் உயர்அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கி​விட்டார்களாம். அதன்பிறகுதான் கோட்டை ஏரியாவை உள்ளடக்கிய போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.  சென்னையை சேர்ந்த தி.மு.க. இளம் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரிடம் போட்டி சட்டசபைக்கான அஜெண்டா கொடுக்கப்பட்டதாம். கைப்பிடி இல்லாத 20 சேர்களை தங்கள் கார்களுக்குள்ளேயே அவர்கள் எடுத்து வந்திருக்கிறார்கள். கார்டுலெஸ் மைக், ஸ்பீக்கர் எல்லாம் தயாராக எடுத்து வந்திருந்தார்கள். அதிரடியாகப் போட்டி சட்டசபை கூட்டம் அரங்கேறியது. இதையெல்லாம் சோதனை செய்யாமல் கோட்டைவிட்ட கோட்டை போலீஸுக்கு ஏகத்துக்கு டோஸ் விடப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்