குஸ்திக்கு வருவதுபோல சபைக்கு வருகிறார்கள்!

மாஃபா பாண்டியராஜன் ஆவேசம்!பேட்டி

ட்டப்பேரவைக் கூட்டம் ஒருபுறம் நடந்துகொண்​டிருக்க, சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வெளியே போட்டி சட்டமன்றம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்படியொரு ஒரு வித்தியாசமான சூழலில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான மாஃபா பாண்டியராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க-வின் செயல்​பாடுகள் எப்படி இருக்கின்றன?”

“23 பேர் இருந்த இடத்தில் இப்போது 89 பேர் இருக்கிறோம் என்ற மமதையும், கர்வமும் தி.மு.க-வினருக்கு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் குஸ்திசண்டைக்கு வருவது போலதான் சட்டசபைக்கு வருகிறார்கள். தங்களை ஆளும் கட்சியினர்போல நினைத்துக்கொண்டு, சபாநாயகர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என அவர்கள் முடிவு செய்கிறார்கள். தாங்கள் அனுபவம் மிக்கவர்கள் என்றும், அ.தி.மு.க உறுப்பினர்கள் அனுபவம் அற்றவர்கள் என்றும் நினைக்கிறார்கள். சபை மாண்புக்குப் புறம்பான பல விஷயங்களை தி.மு.க-வினர் செய்கிறார்கள். சில நேரங்களில் ஸ்டாலின், அவரது கட்சியினரைத் தடுப்பதற்கு முயற்சி செய்தாலும், அதற்கு அவர்கள் கட்டுப்படுவது இல்லை.”

“தி.மு.க உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்கிறார்களே?”

“இது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு.  நடந்து முடிந்த கூட்டத்தொடரில் 50 சதவிகித நேரம் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டாக சில விஷயங்களைப் பதிவு செய்யும்போது அமைச்சர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிருக்கும். கிடைத்த நேரத்தை அவர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படும் நேரத்தில், ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பது, தொகுதிப் பிரச்னைகளைப் பதிவுசெய்வது ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளனர்.”

“தி.மு.க-வினரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து  நீக்கப்படுகின்றன என்றும், அ.தி.மு.க-வினரின் ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை நீக்குவது இல்லை என்றும் குற்றம்சாட்டு​கிறார்களே?”

“எதை நீக்க வேண்டும், எதை நீக்கக் கூடாது என்பது சபாநாயகரின் முடிவு. பல தடவை அ.தி.மு.க உறுப்பினர்கள் சொன்ன கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி சபாநாயகர் கூறியுள்ளார். அவர்களின் பதிவுகளைத் திரும்பப் பெறும்படியும் சபாநாயகர் சொல்லி இருக்கிறார். அவர் இரு கட்சிகளுக்கும் பொதுவாகத்தான் சட்டசபையில் நடக்கிறார்.”

“எதிர்க் கட்சித் தலைவரை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றுவது சரியா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்