உயிரைப் பணயம் வைத்து உண்மைகளை கொண்டுவந்தேன்!

திகில் அனுபவங்களை விவரிக்கும் ரானா அயூப்துணிச்சல்

ரானா அயூப்...

திகார வர்க்கத்துக்கு அச்சுறுத்தலான பெயர். 2002-ம் ஆண்டு முதல் 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள், போலி என்கவுண்டர்கள் குறித்து உயிரையும் துச்சமாக மதித்து உண்மைகளை வெளிக் கொண்டுவர புலனாய்வுப் பணி செய்த பத்திரிகையாளர். இவர் தெஹல்கா இதழில் பணியாற்றிய நேரத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகள் குறித்தும் அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தப் புத்தகம், ‘Gujarat Files: Anatomy of a Cover Up’ என ஆங்கிலத்தில் வெளியானது. அது,

ச.வீரமணியால் தமிழாக்கம் செய்யப்பட்டு, பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ‘குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்’ என்ற அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக வந்த ரானா அயூப்பை சந்தித்தோம்.

‘‘இந்தப் புத்தகத்தில் மையப்புள்ளியாக என்ன சொல்லி இருக்கிறீர்கள்?”

‘‘2002-ம் ஆண்டில் இருந்து 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள் மற்றும் போலி என்கவுண்டர்கள் தொடர்பான பல உண்மைகள் மறைக்கப்பட்டன. அவற்றை வெளியே கொண்டுவர ஸ்டிங் ஆப்ரேஷனில் இறங்கினேன். ஸ்டிங் ஆபரேஷன் செய்பவர்கள் வெகு சிலரே. நானும் கடைசி ஆயுதமாகத்தான், அதை எடுத்தேன். குஜராத்தில் நடந்த படுகொலைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன் பேசத்தவறிய விஷயங்கள், ஒருதலைப்பட்சமாக அந்த கமிஷன் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றை இந்த நூலில் கூறியுள்ளேன். இந்தச் சம்பவங்களின்போது குஜராத் அரசு எந்திரம் எவ்வாறு செயல்பட்டது? ஆட்சி அதிகாரத்தில் இருந்த நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எவ்வாறு செயல்பட்டார்கள்? என்பன குறித்தும் தகவல்களைச் சேகரித்தேன். கோத்ரா ரயில் எரிக்கப்பட்டபோதும் அதைத் தொடர்ந்து அங்கு நடந்த போலி என்கவுண்ட்டர்கள் குறித்தும் எழுதியுள்ளேன். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த நரேன் பாண்டியா படுகொலை மற்றும் என்கவுண்ட்டர்களை அரங்கேற்றிய காவல் துறையின் கோரமுகம் ஆகியவற்றை தோலுரித்துக் காட்டியுள்ளேன். தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோது, எனக்கு ஏற்பட்ட இன்னல்களையும், போராட்டங்களையும் விவரித்து இருக்கிறேன்.”

‘‘இந்தத் துணிச்சலும் தைரியமும் எங்கிருந்து வந்தது?”

‘‘குஜராத்தில் நடந்த படுகொலைச் சம்பவங்களில் உண்மைகள் மறைக்கபட்டு உள்ளன என்பதை உணர்ந்தேன். அங்குள்ள அப்பாவி மக்களின் நிலையை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று இந்தப் பணியில் இறங்கினேன். நான் புலனாய்வு செய்து வெளியிட்ட கட்டுரைகளின் அடிப்படையிலேயே, இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா கைதுசெய்யப்பட்டார். அதுதான் என் பணியின் மீது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்தே, மேலும் பல உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்று ‘அண்டர்கவர் ஜர்னலிசம்’ பாணியில் இறங்கினேன்.”

‘‘பெயரைக்கூட ‘மைதிலி’ என்று மாற்றிக் கொண்டீர்களே?”

‘‘மிகப்பெரிய சவாலான நேரம் அது. என் சிகை அலங்காரம், ஒப்பனைகள், ஆடைகள் என ஒட்டுமொத்தமாக மாறவேண்டியிருந்தது. அது மட்டுமில்லாமல், என் மொழிநடையையும் மாற்ற வேண்டியிருந்தது. அதற்கு நிறையப் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. முதுகலை படிப்பின்போது என் நட்பு வட்டாரங்களில் இருந்தவர்கள் சினிமாத் துறையில் உள்ளனர். அவர்களின் துணையுடன் நிறைய தகவல்களைக் கற்றுக்கொண்டு இந்தப் பணியில் இறங்கினேன். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. அதுதான் என்னை இப்படி துணிச்சலான முடிவுகளை எடுக்க வைத்தது.’’

‘‘உங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்