"மயான ஊழியராக இருப்பது பெருமை!"

நாமக்கல் பிராமணப் பெண் துணிச்சல்தைரியம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டை​யில் சுதந்திர தின விழாவின்போது, முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து கல்பனா சாவ்லா விருதுபெற்ற ஜெயந்தியை தமிழகமே வியப்போடு பார்த்தது.

ஏன் தெரியுமா? இவர், நாமக்கல் நகராட்சியின் எரிவாயு தகனமேடைக்குக் கொண்டுவரப்படும் சடலங்களை சடங்கு சம்பிரதாயங்கள் செய்து எரியூட்டுபவர். மயான ஊழியரான ஜெயந்தி, பிராமணப் பெண் என்பதும், அவர் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் என்பதும் ஆச்சர்யத்தை அதிகரிக்கச் செய்கிறது. வீரதீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும், தங்க முலாம் பூசப்பட்ட பதக்கமும், 5 லட்சம் ரொக்கப் பணமும் முதல்வரால் ஜெயந்திக்கு வழங்கப்பட்டது. விருதுபெற்ற கையோடு மறுநாளே மயானத்தை நோக்கிக் கிளம்பிவிட்டார், இந்தப் புரட்சி பெண். மயானப் பணியில் இருந்த ஜெயந்தியிடம் பேசினோம்.

‘‘நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டி என் சொந்த கிராமம். அப்பா பெயர் பட்டு குருக்கள். அம்மா பருவதவர்தினி. என் கணவர் வாசுதேவன். நாங்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்களுக்கு இரண்டு மகன்கள். என் அப்பா இறந்தபோது கொள்ளி போட யாரும் வரவில்லை. ‘கோயிலை நம்பி ஜீவனம் செய்கிறோம். கொள்ளி போட்டால் ஒரு வருடத்துக்கு பூஜை, புனஸ்காரம் செய்ய முடியாது’ எனச் சொல்லிவிட்டார்கள். பெரிய அக்காவின் கணவர்தான் எங்க அப்பாவுக்கு அனைத்துக் காரியங்களையும் செய்தார். பிறகு, பொருளாதார ரீதியாக ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. தற்போது மயானத்தில் உதவியாளராக இருக்கும் மலரும் நானும், தகனமேடை வளாகத்தில் தோட்ட வேலைக்காக 2012-ல் சேர்ந்தோம். ஆறு மாதங்களில் தோட்ட வேலை முடிந்தது. வேறு ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டு, இந்த வேலைக்கு வந்தோம். முதல் நாள் 70 வயது பாட்டியின் உடலை தகனம் செய்தேன். தொடர்ந்து 3, 4 பிணங்களை எரித்தபோது, மனம் மிகவும் கனமாக இருந்தது. பிறகு சகஜமாகிவிட்டது. 2014-ல் மயான மேலாளர் ஆனேன். இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பிணங்களை தகனம் செய்துள்ளேன். இந்த வேலை செய்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது.’’

‘‘குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் எத்தகைய எதிர்ப்புகள் வந்தன?’’

‘‘முதலில், குடும்பத்தில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. என் கணவரும், அம்மாவும்கூட எதிர்த்தார்கள். அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னேன். பிறகு ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், எங்கள் உறவினர்கள் மத்தியில் எனக்குக் கடும் எதிர்ப்பு. என்னிடம் யாரும் பேச மாட்டார்கள். என் குழந்தைகள் எங்களின் உறவினர்கள் வீடுகளுக்குள் விளையாடப் போனால், ‘உங்க குடும்பம் சபிக்கப்பட்ட குடும்பம். எங்க வீட்டுப் பக்கம் வரக்கூடாது’ எனத் திட்டி அனுப்பிவிடுவார்கள். என் குழந்தைகள் அதை என்னிடம் சொல்லி அழும்போது எனக்குத் தாங்க முடியாத வேதனையாக இருக்கும்.’’

‘‘கல்பனா சாவ்லா விருது கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்