‘திண்ணை'யில் படித்தால் விண்ணையும் தொடலாம்!

ஒரு தமிழாசிரியரின் சாதனை...சாதனை

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தேனியில், இளைஞர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கி ஏராளமான அரசு அதிகாரிகளை உருவாக்கிச் சாதனை புரிந்துள்ளார், தமிழாசிரியர் ஒருவர்.

தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருபவர், கோ.செந்தில்குமார். ‘திண்ணை’ என்ற பயிற்சி வகுப்பை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்தினார். கொண்டுராஜா உயர்நிலைப் பள்ளி அந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.

செந்தில்குமாரிடம் பேசினோம். “2006-ம் ஆண்டில் நான் போட்டித் தேர்வு எழுதினேன். அது, எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றியது. ஆசிரியரான நானே இந்தத் தேர்வை எழுதுவதற்குச் சிரமப்பட்டேன் என்றால், கிராமப்புற மாணவர்களால் எப்படி இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது. எனவே, போட்டித் தேர்வு குறித்த விழிப்பு உணர்வை எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு ஏற்படுத்த விரும்பினேன். 2012-ல் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். அவர்களில் ஐந்து பேர் டி.என்.பி.எஸ்.பி தேர்வில் தேர்ச்சிபெற்றனர். அதை அறிந்து,  தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பயிற்சிக்கு வந்தனர்.

அரசு ஊழியர் ராமமூர்த்தி, ஆசிரியர் அறிவொளி ராமகிருஷ்ணன், அந்தோணிராஜ், சமூக ஆர்வலர் அசோகன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் ராமகிருட்டிணன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் சிவக்குமார், ஆசிரியர்கள் செந்தில்குமரன், மோகன் மகேஷ், மாணிக்கராஜ், பிரபாகரன், முத்தானந்த சுந்தரி, அருள் ஆரோக்கியம், அழகர்சாமி உட்பட 24 தன்னார்வப் பயிற்றுநர்கள் உள்ளனர். இதுவரை, 1,500 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். இவர்களில் 150-க்கும் மேற்பட்டோர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்