மிஸ்டர் மியாவ்

ரஜினியின் கறார்...

த்யா மூவீஸ் தயாரிப்பில் உருவான ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை நவீன தொழில்நுட்ப முறையில் தயார் செய்து வெளியிடப் போகிறார், ஆர்.எம்.வீரப்பன். ரஜினியின் ‘பாட்ஷா’ பட ரீ-மேக் உரிமையை முன்னணி நடிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர். ‘பாட்ஷாவின் ரீ-மேக் உரிமையை யாருக்கும் தராதீங்க’ என்று ரஜினி கறாராக சொல்லிவிட்டார்.  ‘ரிக்‌ஷாக்காரன் ‘போலவே ‘பாட்ஷா’வும் டிஜிட்டல் ஸ்டைலில் தயாராகிறது. ரஜினி நடித்துவரும் ‘2.0’ படத்துக்கு முன்பாக ரிலீஸாகிறது ‘பாட்ஷா’.

தனுஷின்  கோபம்...

‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘நான் புடிச்சு வெச்ச புள்ளையாரை நானே கும்பிடணுமா’ என்றொரு வசனத்தை எம்.ஜி.ஆர். பேசுவார். அதுபோலத்தான் சினிமாவில் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்திய தனுஷின் மனநிலையும் இருக்கிறது. ‘வடசென்னை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார், சமந்தா. ‘நான் நாக சைதன்யாவை கல்யாணம் செய்யப் போறேன்’ என்று சொல்லிவிட்டு தனுஷ் படத்திலிருந்து விலகினார் அவர். இப்போது ‘ரஜினி ரசிகன்’ இயக்குநர் ‘பொன்ராம்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி இருக்கிறார் தனுஷ். 

ராஜேந்தரின் தாளம்...

ப்போது உற்சாக வெள்ளத்தில் துள்ளிக் குதிக்கிறார், டி.ராஜேந்தர். மதுரை கிரிக்கெட் அணிக்காக சிம்பு ஒரு பாடலைப் பாடி அசத்தி இருக்கிறார். அவருக்குப் போட்டியாக காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு சிம்புவின் அப்பா  டி.ராஜேந்தரைப் பாடவைத்து அசத்தி இருக்கிறார் ‘போடா போடி’ இசையமைப்பாளர் தரண்.  இதுகுறித்து டி.ஆரிடம் ‘என்ன சார், இப்பவும் லைம்லைட்டில் யூத்துக்குப் போட்டியா இருக்கீங்க?’ என்று கேட்டால், ‘எல்லாம் கடவுள் ஆசீர்வாதம் சார்” என்று ஆகாயத்தைக் காட்டுகிறார்.

நயன்தாராவின் பாசம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்