தேர்தல் செலவு... வீடு புகுந்து களவு!

வேலூர் வில்லன் குற்றம்ஓவியம்: கண்ணா

ன் மனைவியை மாநகராட்சி மேயராக ஆக்குவதற்காக வீடுவீடாகத் திருடிய நபர் ஒருவர் போலீஸில் சிக்கியிருக்கிறார். யார் அந்த நபர்? அவர் எப்படி சிக்கினார்?

சென்னை ஆழ்வார் திருநகர் விரிவுப் பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான குமாரதேவன். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் வீட்டில் தனியாக வசித்தனர். கடந்த 16.7.2016 அன்று மதியம் 2 மணி அளவில் குமாரதேவன் வீட்டுக்கு ஒரு நபர் வந்தார்.  தன்னை மாநகராட்சி அதிகாரி என்று அறிமுகப்​படுத்திக் கொண்டு சொத்து வரி, குடிநீர் வரி தொடர்பான விவரங்களைக் கேட்டுள்ளார். வரி கட்டியதற்கான ரசீதுகளை குமாரதேவன் காண்பித்து இருக்கிறார். அதன் பிறகு, வீட்டின் பின்பக்கம் உள்ளிட்ட இடங்களை ஆய்வுசெய்த அந்த நபர், அங்கிருந்து கிளம்பிவிட்டார்.  இரண்டு நாட்கள் கழித்து, பீரோவைத் பார்த்த குமாரதேவனுக்கு பயங்கர அதிர்ச்சி. பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டுப் போயி​ருந்தது. அதுதொடர்பாக, விருகம்பாக்கம் போலீஸில் குமாரதேவன் புகார் கொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்