கார்னர் பண்றாங்க... சாஃப்ட் லேடி இல்லை... தேர்ட் ரேட் ஆள்...

நடிகை ராதா சொல்லும் ரகசியங்கள்பேட்டி

சினிமாவில் நடித்த காலத்தில்கூட ராதா இவ்வளவு பிரபலமாக இருக்கவில்லை. இப்போது, கமிஷனர் ஆபீஸில் புகார், ஆடியோ சர்ச்சை என பரபரப்புச் செய்தியாக மாறிவிட்டார்.

அ.தி.மு.க. பிரமுகர் முனிவேலை கடத்திச் சென்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டு ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் நடித்த ராதா மீது பாய்ந்தது. அதைத் தொடர்ந்து கமிஷனர் ஆபிஸில் புகார், கொலை மிரட்டல் ஆடியோ, என்று நடிகை ராதாவைச் சுற்றி  பல பிரச்னைகள் வலம் வருகின்றன.

அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்!

‘‘என்ன பிரச்னை உங்களுக்கு?”

‘‘முனிவேலின் மனைவி ஏதாவது ஒரு புகார் கொடுத்துகிட்டே இருக்காங்க. அதனாலதான் நான் கமிஷனர் ஆபீஸே வந்தேன்.

வாட்ஸ் அப் ஆடியோவுல, அவர் (முனிவேல்) குடித்துவிட்டு உளறுகிறார். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

முனிவேலும் அவர் மனைவியும்  ஒண்ணாதான் இருக்காங்க. ஆனால், அவங்க என்னை ‘கார்னர்’ பண்ணிட்டே இருக்காங்க. என் பேரை டேமேஜ் பண்றாங்க. என்னை ரொம்ப பயமுறுத்துறாங்க.

முனிவேலை நான் அபகரித்து வைக்கவில்லை. உமாவுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு, அவங்க  ‘சாஃப்டான’ லேடி கிடையாது. ஆவங்க சும்மா வீட்டுல உக்கார்ந்துகிட்டு இருக்கிற லேடி இல்லை. கந்துவட்டிக்குக் கொடுத்துட்டு வாழ்ந்துட்டு இருக்குறாங்க. அவங்களை நான் மிரட்டல. அவங்க தான் என் மேல புகார் கொடுத்துட்டே இருக்காங்க!”

‘‘முனிவேலை உங்களுக்குத் தெரியுமா?”

‘‘முனிவேல், எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரிஞ்சவர். அது உண்மை. அதனால்தான் நான் அவர்கிட்ட குளோஸா  பழகினேன். அவர் என்கிட்டே அவர் மனைவியை பற்றி சொன்னார். ‘அவ ஒரு சைக்கோ, சாடிஸ்ட்’ என்று பல முறை சொல்லி இருக்கார். இப்பகூட, ‘அவ ஒரு பேய் பேய்’னு தான் சொல்வார். ‘அதை நீ பேட்டியா சொல்லு’ என்றேன். ஆனால் அவர் வெளியில் வந்து சொல்ல மாட்டேன்றார். அவர் சொல்லிவிட்டால் இந்தப் பிரச்னையே இல்லை.”

‘‘நீங்கள் முனிவேலை திருமணம் செய்து கொண்டீர்களா?”

‘‘எனக்கு முனிவேலோட வாழவும் விருப்பம் கிடையாது. அவரோட ஃபிரெண்ட்ஷிப், ரிலேஷன்ஷிப் எதுவும் தேவையில்லை. அவர் அவருடைய மனைவியோடவே இருக்கட்டும். என்ன நிம்மதியா விட்டா போதும். இதுதான் நான் சொல்லிக்க விரும்புறது!”

‘‘பைசல் என்பவருடன் உங்களுக்கு என்ன பிரச்னை?”

‘‘கடந்த 2013-ல் பைசல் மேல புகார் கொடுத்து இருக்கேன். அவருடன் 5 வருடம் வாழ்ந்தேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி  50 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றினார். அதைப் புகாராகக் கொடுத்து இருந்தேன். அதனால் அவர் என்மீது ‘ரிவென்ஜ்’ எடுத்து இருக்கார். அவரும் உமாவும் சேர்ந்துகொண்டு  இப்படி செய்றாங்க. இதனால் எனது சினிமா லைஃப் பாதித்துள்ளது. உமாவையும், முனிவேலையும் யாருக்கும் தெரியாது. ராதா என்றால் வெளியில் எல்லோருக்கும் தெரியும். அதனால் என் பெயரைச் சொல்லி பிரபலம் தேடப் பார்க்கிறார்கள்.”

‘‘முனிவேலுக்கும் உங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருப்பதாகச் சொல்கிறார்களே?”

‘‘முனிவேலுக்கும் எனக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் இல்லை. எனது அம்மா ஹைதராபாத்ல இருந்தப்போ யாருக்கோ ஒருவருக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்துட்டார். அதுக்குப் பிறகுதான் அந்த ஆளைப் பற்றி விசாரித்தேன். அந்தச் சமயத்தில்தான் பைசல் வந்தார். அவர்கிட்ட இந்த விஷயத்தை சொன்னதும், ‘பணம் வாங்கி ஏமாற்றிய நபர் ‘தேர்ட் ரேட்’ ஆளாக இருக்கான். அவன்கிட்ட பேசுறதுனா கட்சிக்காரங்க யாரையாவதுவிட்டு பேசினால் சரியாக இருக்கும்’னு முனிவேலை  எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் தெரிஞ்சது முனிவேல் சின்ன வயசு ஃப்ரெண்ட் என்று. அவ்வளவுதான்!

மீண்டும் மீண்டும் முனிவேலின் மனைவி இப்படி நடந்துகொண்டு இருந்தா நான் மனித உரிமை ஆணையத்துல புகார் கொடுப்பேன். வழக்குத் தொடுப்பேன். நீங்களும் உங்க கணவரும் பேசி பிரச்னையைத் தீர்த்துக்கங்க என்பதுதான் என் யோசனை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்