கழுகார் பதில்கள்!

 

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

‘உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை’ என்கிறாரே ப.சிதம்பரம்?

இதைச் சொல்லும் உரிமையை ப.சிதம்பரம் பெற்றுவிட்டாரா எனத் தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவராக ஆனபிறகு இதை அவர் பேட்டியாக சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், இறுதி முடிவு என்னவோ டெல்லி கைகளில்தானே!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவரையோ தற்காலிகத் தலைவரையோ நியமிக்க முடியாமல் இருக்கும் நிலைமையைப் பற்றி..?

நிரந்தரத் தலைவரோ, தற்காலிகத் தலைவரோ நியமிக்க முடியவில்லை என்பது அல்ல நிலைமை. மாநிலத்தில் தலைவர் என்ற ஒருவர் வேண்டுமா என்று காங்கிரஸ் அகில இந்திய மேலிடம் நினைத்திருக்கலாம். ‘ஆள் இல்லாத ஊரில் யாருக்கு டீ ஆத்துறது?’ என்று நினைத்திருக்கலாம்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

காஷ்மீர் ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கையாள்வதில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளதே?

காஷ்மீர் விவகாரம், மோடி பிரதமர் ஆனபிறகு உருவானது அல்ல. 60 ஆண்டுகாலப் பிரச்னை அது. அதைச் சரியாகக் கையாளாத குற்றவாளிகளில் முதலிடம் காங்கிரஸ் கட்சிக்குத்தான் உள்ளது. எப்படியாவது சுதந்திரம் கிடைத்தால்போதும் நிலப்பரப்பு குறைவது பற்றி எந்தக் கவலையும் இல்லை என்று செயல்பட்டது நேரு காலத்து காங்கிரஸ்.  காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தால் போதும் என்று மட்டுமே இந்திரா நினைத்தார். பரூக் அப்துல்லா குடும்பம் தலையெடுக்காமல் இருந்தால்போதும் என்று ராஜீவ் அரசியல் திட்டம் போட்டார். பரூக், முப்தி முகமது வசம் அந்த மாநிலம் போனதும், சோனியா காங்கிரஸ் அந்த மக்களை மறந்தேவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், இடையிடையே ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி., அந்த மக்களை இந்தியர்களாகப் பார்க்கவில்லை... மத மாச்சர்யங்களுடன் அணுகியது. அங்கு நடக்கும் போராட்டங்களை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறது. காஷ்மீர் மக்களின் தார்மீக கோரிக்கைகள் என்ன? அதற்குரிய விளக்கம் என்ன? என்பதையே கேட்க, சொல்லத் தயாராக இல்லாமல் வேட்டுக்கு வேட்டே பதிலாக மாறிவருகிறது. இந்தப் போக்கில் போனால் காங்கிரஸ், பி.ஜே.பி. மட்டுமல்ல, யாராலும் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க முடியாது. அந்த மக்களுக்கு முதலில் நம்பிக்கை ஏற்படுத்தும் காரியத்தை நம்முடைய அரசு செய்தாக வேண்டும்.

ரேவதிப்ரியன், ஈரோடு.

இந்த சுதந்திர தின விழாவில் குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் - இவர்களில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது?

‘தமிழ்நாட்டில் ஏழைகளே இனி இருக்க மாட்டார்கள். ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்’ என்று சபதம் எடுத்துள்ளார் ஜெயலலிதா. அப்படியானால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏழைகள் இருக்கமாட்டார்கள். அதன்பிறகு, இலவசத் திட்டங்கள் அறிவிக்க வேண்டியது இல்லை. இதைவிடச் சிறப்பான உரை என்ன இருக்க முடியும்? ‘தேன்போல பாய்கிறதே’ ஜெயலலிதாவின் உரை.

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

நதிநீர்ப் பிரச்னையில் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்​வதற்காக கேரள உளவுத்துறை தமிழகத்துக்குள் நுழைந்து மோப்பம் பிடிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாராமே?

இது பல காலமாக நடப்பதுதான். அண்டை மாநிலத்தில் இருந்துவரும் தொல்லைகளைத் தெரிந்துகொள்வதற்காக இப்படிச் செய்வார்கள். காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு போன்றவை அண்டை மாநிலங்களுடன் தொடர்புடைவை. தமிழகத்தில் நடக்கும் செயல்பாடுகள் அந்த மாநிலத்தை பாதிக்கக் கூடியவை என்பதால் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு எதிராக அந்த மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்​படுவதும் இதன் அடிப்படையில்தான். காவிரி பிரச்னைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் தஞ்சை பாண்டியன் மீது கர்நாடகப் பதிவு எண் கொண்ட வாகனம் மோதிவிட்டுச் சென்றுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தமிழக அரசு உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

ஏ.கணேசன், தூத்துக்குடி-1.

சசிகலா புஷ்பாவின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம் அவரது மோசமான நடவடிக்கைகள்தானே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்