மிஸ்டர் கழுகு : கார்டன்... ‘போ' பூங்குன்றன்!


 

‘‘கார்டன்... ‘போ’ குன்றன்’’ என கழுகார் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி வந்து விழுந்தது. கழுகாருக்காகக் காத்திருந்த நேரத்தில் என்ட்ரி ஆனார்.

“எதிர்க் கட்சிகள் இல்லாததால் உப்பு சப்பு இல்லாமல் நடக்கிறது சட்டசபை. தி.மு.க. உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேற்றப்பட்ட பிறகு கிடுகிடு போராட்டங்களை நடத்துவார்கள் என்பதை ஆளும் கட்சி ரசிக்கவில்லை. போட்டி சட்டசபையை நடத்தி அவர்கள் ஸ்கோர் செய்ததை ஆளும் கட்சியால் ஏற்றுக்​கொள்ள முடியவில்லையாம். இதன்பிறகுதான் கோட்டையில் கெடுபிடி அதிகமானது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பத்திரிகை​யாளர்கள்தான்.  இனி எந்த நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாத அளவுக்குக் அவர்களுக்குக் கடும் கட்டுப்பாட்டுகளைச் செய்தித்துறை விதித்திருக்கிறது. காவல் துறையும் உடன் இருந்திருக்கிறது. இதுபற்றி மீடியாவினர் செய்தி துறை இயக்குனர் குமரகுருபரனிடம் முறையிட்டனர்’’

‘‘என்ன சொன்னாராம்?’’

‘‘ ‘உங்களால்தான் பிரச்னை ஏற்பட்டது. கோட்டையில் ஒதுக்குப்புறமாக உங்களுக்கு இடம் ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. சட்டசபை வளாகத்துக்கு அருகில் நான்காம் எண் கேட் அருகே முன்பு போலவே செய்தி எடுக்க முயன்றால், தலைமைச் செயலகத்துக்குள் செய்தியாளர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும்’ எனச் சொன்னாராம். இதனால் மீடியாவினர் கொதிப்பில் இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கே இவ்வளவு கெடுபிடிகள் என்றால், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கவரும் பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும். தலைமைச் செயலக பிரஸ் ரூமுக்கு செல்லும் கதவு மூடப்பட்டிருக்கிறது. பல வருடங்களாகப் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கவந்த இடத்தில் இருந்து விரட்டியடிக்கப்படக் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. செவ்வாய்க்கிழமை சட்டசபையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துவிட்டு வெளியே வந்து மீடியாவிடம் பேச முயன்று செய்தியாளர்கள் இருக்கும் இடத்தைத் தேடி அழைந்தது பரிதாபம். இது இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என தெரியவில்லை.’’

‘‘சபாநாயகருக்கு சிக்கல் என செய்திகள் கிளம்பியிருக்கிறதே?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்