"அம்மாவை-வை மதிக்காத மா.செ!"

குமரி அ.தி.மு.க-வில் கும்மாங்குத்துகுழப்பம்

ள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தை எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் நடத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

‘‘அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றத் தலைமை நிர்வாகிகளின் முன்னிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்’’ என்று ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.

அந்த அறிவிப்பு வந்ததில் இருந்து கன்னியாகுமரி அ.தி.மு.க-வில் ஒரே களேபரம். கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பச்சைமால், எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய, ஜூலை 23-ம் தேதி அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் போட்டிருந்தார். பின்னர், ஒவ்வொரு ஒன்றியமாக எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனை கூட்டத்தை பச்சைமால் நடத்தினார். சில ஒன்றியச் செயலாளர்களைத் தவிர மற்ற அனைவரும் அதைப் புறக்கணித்துவிட்டனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, “மாவட்டச் செயலாளர் விஜயகுமார் வந்தபிறகு நியமிக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் பச்சைமால் கூட்டத்துக்குப் போனால், விஜயகுமாரால் பதவியை இழக்க நேரிடும்” என்றனர்.

ஜூன் 8-ம் தேதிதான் தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். ராஜ்யசபா எம்.பி-யாக அறிவிக்கப்பட்ட விஜயகுமார், மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஏற்கெனவே தளவாய்சுந்தரம் அணி, பச்சைமால் அணி, நாஞ்சில் முருகேசன் அணி என முறுக்கிக்கொண்டு நிற்கும் நிலையில், புதிதாக விஜயகுமார் அணி உருவாகி உள்ளது. கடந்த சில வாரங்களில் ஒரு சிலரைத் தவிர கிளை முதல் மாவட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர். ஆக்டிவ் ஆக இருந்த பல அ.தி.மு.க-வினரின் பதவிகள் பறிக்கப்பட்டன. அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டனர்.

இந்த நிலையில், 19-ம் தேதி ஜெயலலிதா நடத்தச் சொல்லிய எம்.ஜி.ஆர் மன்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ‘புரோட்டக்கால்’படி, அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரத்தையும் பச்சைமால் அழைத்திருந்தார். தலைமை எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகளின் பெயர்களையும், தளவாய்சுந்தரத்தின் பெயரையும் மாவட்டச் செயலாளர் விஜயகுமார் பெயரையும் போட்டு போஸ்டர்கள், பேனர்களை பச்சைமால் வைத்திருந்தார். அதை அறிந்த மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி., ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, களியக்காவிளை அருகே சாரப்பழஞ்சி கூட்டுறவு சங்க விழாவுக்குச் சென்றுவிட்டார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், “மாவட்டச் செயலாளர் விஜயகுமார் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்... வந்துவிடுவார்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், கடைசி வரை விஜயகுமார் வரவே இல்லை. ஒன்றியச் செயலாளர் சந்தையடி பாலகிருஷ்ணன், மாவட்ட அணிச் செயலாளர்கள் அசோகன், சிவகுற்றாலம், பாலஜனாதிபதி, குழித்துறை நகரச் செயலாளர் ராஜன் போன்றவர்களைத் தவிர மற்ற அணிச் செயலாளர்கள், பேரூர், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவுப்படி நடந்த எம்.ஜி.ஆர்.மன்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் விஜயகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்