டெங்கு வேகம்... திருத்தணி சோகம்!

ஊரையே காலி செய்த மக்கள்!

டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால்      திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியே பீதியில் உறைந்துள்ளது. டெங்குவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் காவேரிராஜபுரம் பகுதியில் மரண அமைதி நிலவுகிறது.

திருத்தணி அருகே காவேரிராஜபுரம், ஆதிஆந்திர காலனி ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஒரு மாதமாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த இரண்டு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு ஒருவர் என காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 13-ம் தேதி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட யுவராஜ் என்ற ஆறு வயது சிறுவன் பலியானான். அடுத்த சில தினங்களில், சந்தோஷ் என்ற ஆறு வயது சிறுவனும் பலியாக, கிராம மக்கள் பீதி அடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் அதிகாரிகள் ஆகஸ்ட் 20-ம் தேதி சென்றனர். அன்றைய தினம் மோகன்குமார், மோகன் ஆகியோர் காய்ச்சலுக்குப் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, மக்கள் அச்சத்தில் ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.

காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 40 பெரியவர்கள், 22 குழந்தைகள் என 62 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். திருத்தணி மங்காபுரம் காலனி, என்.என்.கண்டிகை, சத்திரம் ஜெயபுரம், அத்திப்பட்டு, சீதாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கும் தீவிரக் காய்ச்சல் இருப்பது தெரிந்ததால் அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அமைச்சர் விஜயபாஸ்கர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்