கழுகார் பதில்கள்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

 ‘கட் அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம்’ என்று தி.மு.க-வில் தடை விதிக்கப்பட்டு இருப்பது பற்றி?


 தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரைத் தவிர வேறு யாருக்கும் பேனர் வைக்க வேண்டாம் என்பதுதான் தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ள தடை. பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு யாரும் கட் அவுட் வைப்பதாகத் தெரியவில்லை. அவரது பிறந்த நாளுக்கே ஓரிரு கட் அவுட்கள் தான் வைப்பார்கள். இப்போது தலைவர் கருணாநிதியைவிட, பொருளாளர் ஸ்டாலினுக்குத்தான் அதிகப்படியான கட் அவுட்கள் வைக்கப்படுகின்றன. இவர்களைத் தாண்டி கனிமொழி கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு, அவரது பிறந்த நாளுக்கு அதிகமான வாழ்த்து, வரவேற்புகள் செய்யப்படுகின்றன. கனிமொழிக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என்று நேரடியாகச் சொல்வதற்குப் பதிலாக, இந்த மூவரைத் தவிர, வேறு யாருக்கும் வைக்காதீர்கள் என்று தலைமைக் கழகம் அறிவிக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி பிரச்னைக்கே இவர்களுக்கு நேரம் போதவில்லை. இவர்களுக்கு ஜெயலலிதாவை எதிர்க்க நேரம் இருக்குமா என்றே தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்