மிஸ்டர் கழுகு: நடுக்கத்தில் மாஜி மந்திரிகள்!

கருணாநிதி வாங்கிய சீக்ரெட் கையெழுத்து...

ழுகார் உள்ளே நுழைந்ததும், 2014-ம் ஆண்டு டிசம்பர் ஜூ.வி. இதழ் ஃபைலைக் கேட்டு வாங்கிப் புரட்ட ஆரம்பித்தார். ‘கருணாநிதி வீழ்த்திய ஸ்டாலின் தளபதிகள்’ என்ற அட்டைப் படத்தைப் பார்த்ததும் சிரித்தபடியே உள்ளே புகுந்தார்!

‘‘அப்போது நான் கொடுத்த செய்திகளுக்கு இப்போது வேலை வந்துள்ளது. தி.மு.க-வின் இப்போதைய மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேயறைந்ததுபோல ஆகிவருகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய திகிலுக்குக் காரணம்!”

‘‘அப்போது என்ன நடந்தது?”

‘‘2014-ம் ஆண்டு டிசம்பரில் தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தல் நடந்தது. அப்போது மாவட்டச் செயலாளர்கள் பலரும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரையும்  அந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதி வரவழைத்தார். அப்போது நடந்ததைச் சொல்லி இருந்தேன். 15-ம் தேதி  மாலைதான் இந்த மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் சென்னைக்கு வரச்சொல்லி தாக்கீது போனது. சிலர் மட்டும் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு கேட்டார்கள். ‘தலைவர் அழைத்தால் தலைவருக்குத்தான் தெரியும்’ என்று மையமாக ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஏதோ எழுதி வாங்கப் போகிறார் என்று அடுத்துச் சொன்னார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் இதையே ஸ்டாலினிடம் கேட்க, ‘எழுதிக் கேட்டால் எழுதிக் கொடுங்க’ என்றும் சொல்லியிருக்கிறார்.

16-ம் தேதி காலை 9 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் கோபாலபுரம் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். 10.30-க்குதான் இவர்கள் மாடிக்கு அழைக்கப்பட்டார்கள். அப்போது தொண்டையை சரி செய்துகொண்ட அன்பழகன், ‘தலைவரும் நானும் கலந்து பேசி சில முடிவுகளை எடுத்துள்ளோம். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கட்சி இன்று இருக்கும் நிலைமையில் சில சீர்திருத்தங்களை, புனரமைப்பு வேலைகளைச் செய்தால் மட்டுமே கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர முடியும். வளர்க்க முடியும். ஒரே ஆள் மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருப்பது​தான் பல்வேறு விமர்சனங்களை விதைத்துவிட்டன. அமைச்சர்கள் சிலர் மீது வழக்குகள் இருக்கின்றன. இதன் தீர்ப்புகள் வர இருக்கின்றன. அதனால் தலைவரும் நானும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்கள். பலரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு​விட்டீர்கள். சிலருக்குப் போட்டி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதிலும் நீங்கள் போட்டியிட்டால், ஒரே ஆளிடம் பொறுப்புகள் குவியும். அதனால், இப்போது மாவட்டச் செயலாளராக ஆகிவிட்டவர்கள் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வுக்கு சீட் கேட்கக் கூடாது. அப்படி வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு போட்டியிட அனுமதி கிடைக்கும். இதுதான் கட்சியின் நன்மைக்காக தலைவரும் நானும் கலந்து பேசி எடுத்த முடிவு. இதனை நீங்கள் அனைவரும் ஏற்று ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று அன்பழகன் பேசப்பேச இவர்கள் அனைவர் முகங்களும் இருள ஆரம்பித்தன. யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மறுத்துப் பேசும் துணிச்சலும் இல்லை. பேயறைந்தது போலத்தான் இருந்​துள்ளார்கள். ‘இதனை ஏற்றுக் கொண்டால் அதற்கான கடிதத்தில் அனைவரும் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்’ என்று அன்பழகன் சொன்னார். அனைவரும் அப்போது கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தார்கள்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்