ஆளும் வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா?

திருவாரூரில் உருகிய கருணாநிதி

ருணாநிதியின் கார் கிளம்பிவிட்டது. முதல் பயணம் திருவாரூர்!

மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த 25-ம் தேதி திருவாரூர் வந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. விளமல் பகுதியைக் காரில் கடந்து செல்கையில், தன் இளமைக்கால நினைவுகளை அருகில் இருந்தவர்களுடன் நெகழ்ச்சியோடு நினைவுகூர்ந்துள்ளார். அப்போது, “இந்த மண்ணில் விளையாடித் திரிந்த நான், ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறேன். மீண்டும் முதலமைச்சர் ஆவேனா? ஆறாவது முறையாக அந்த வாய்ப்பைப் பெறுவேனா?” என்று ஏக்கத்துடன் கேட்டிருக்கிறார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற திருவாரூர் தெற்குவீதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம், மாலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அனைவரும், “திருவாரூரில் நீங்கள்தான் போட்டியிட வேண்டும். கடந்த முறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உங்களை வெற்றி பெற வைத்தோம். இந்த முறை, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” என்று முழங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்