“அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு எப்படி?”

தலைமைக் கழகமே கேட்குது இப்படி!

ரசியல் கட்சிகளின் அலுவலகங் களில் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அ.தி.மு.க-வில் போட்டியிட விரும்புபவர்கள் 20-ம் தேதி முதல் விருப்பமனுவைக் கொடுக்கலாம் என்று ஜெயலலிதா அறிவித்தார். அன்று காலையிலேயே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பாக நிர்வாகிகள் குவிந்துவிட்டனர். விண்ணப்பங்களை வாங்குவதற்காக வரிசையில் நின்றனர். அதில், மகளிர் அணியினர் ஏராளம். கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிட விரும்புவோருக்கு தனிக் கவுன்டர்கள் அமைக்கப் பட்டிருந்தன. 11 ஆயிரம் ரூபாய் கொடுத்து போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கினர். முதல் நாள் அன்று ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றாலும், 20 பேரிடம் இருந்து மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன.

ஜெயலலிதா ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதனன், முதலாவது விருப்ப மனுவைக் கொடுத்தார். இதுதவிர, 19 அமைச்சர்கள் தாங்கள் போட்டியி டுவதற்கான விருப்பமனுக்களைக் கொடுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்