பெரியோர்களே... தாய்மார்களே! - 59

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

மிழ்நாட்டில் அர்த்தம் இழந்து அசிங்கப்பட்டுப்​போன சொற்களில் ஒன்று, புரட்சி!

பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் தலைவியைப் பார்த்ததும் ஒரேநேரத்தில் விழுந்து புரள்வது அல்ல... புரட்சி. புரையோடிப்போன சமூகத்தை மொத்தமாய் புரட்டிப்போடுவதற்குப் பெயர்தான் புரட்சி. சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, கியூபாப் புரட்சி, வியட்நாம் புரட்சி, எகிப்துப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி... அறிந்த நமக்கு, நமக்குப் பக்கத்திலேயே நடந்த தெலங்கானா புரட்சியைத் தெரி​யாது. கவிஞர் இன்குலாப் ஒருமுறை சொன்னார்: ‘‘நமக்குத் தூரப்பார்வைதான் உண்டு. கிட்டப்பார்வையே கிடையாது’’ என்று!

‘‘கடந்த 200 ஆண்டுகால வரலாற்றில் தெலங்கானாப் போராட்டத்துடன் ஒப்பிடத்தக்கதாய் ஒரே ஒரு இயக்கமாவது நடைபெற்றுள்ளதா?” என்று பசவபுன்னையா கேட்டார். ஐந்து ஆண்டுகள் நடந்த ‘வீரத் தெலங்கானா புரட்சி’யின் நேரடிச் சாட்சிகள் தோழர்கள் சுந்தரய்யாவும், ராஜேஸ்வர ராவும், பசவபுன்னை​யாவும்!

1946 ஜூலை 4-ம் நாள் முதல் 1951 அக்டோபர் 21 வரை ஐந்து ஆண்டு காலம் நல்கொண்டா, வரங்கல், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் கிராமங்கள் கம்யூனிஸ்ட்டுகள் வசம் ஆனது. இங்கு இருந்த கிராம நிலப் பிரபுக்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். அவர்களிடம் இருந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 10 லட்சம் ஏக்கர் நிலம் மக்களுக்குப் பிரித்துத் தரப்பட்டது. தொழிலாளர் கூலி உயர்ந்தது. தொழிலாளர் பெற்ற கடனுக்கான கொள்ளை வட்டி ஒழிந்தது. குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்​பட்டது. அந்தக் கூலி ஒழுங்காகத் தரப்பட்டது. லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக தினமும் இரண்டு​வேளை சாப்பாடு சாப்பிட்டார்கள். இந்தியாவில் நடந்த, அதுவும் சென்னைக்கு அருகில் நடந்த நிலவுடைமைப் புரட்சி இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்