மக்கள் அமைத்த மாரியகம்...

ஏரிக்கு உயிர்க் கொடுத்த தர்மபுரி மக்கள்!

“என்னால் என்ன செய்ய முடியும்?” என்று எதற்கெடுத்தாலும் அலுத்துக்​கொள்பவர்களுக்கு மத்தியில், பொது​மக்கள் ஒன்றிணைந்து ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்தியிருக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்துகிறது. 15 ஆண்டு்களுக்கும் மேலாக முட்புதர்களும் சாக்கடைக் கழிவுகளும் சூழ்ந்து, கழிவுநீர்க் குட்டையாகிக் கிடந்த  தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி, இன்றைக்கு ‘மாரியகம்’ என்ற பெயரில் பரந்து விரிந்து தண்ணீரைத் தாங்கி நிற்கிறது. இது எப்படி சாத்தியமானது?

தர்மபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்​பாளரான பாலசுப்பிரமணியன், ‘‘12 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி, 3 ஏக்கர் அளவுக்குச் சுருங்கி​யது. அதுவும் குப்பைக்கூளமாக, பிளாஸ்டிக் கழிவுகளின் கூடாரமாக மாறிப் போய்விட்டது. மரம் நடுதல் என இயற்கை சார்ந்து  இயங்கிக்கொண்டிருந்த எங்களை இது யோசிக்கவைத்தது. 2014-ம் ஆண்டு டிசம்பரில், ‘தர்மபுரி மக்கள் மன்றம்’ அமைப்பை ஏற்படுத்தினோம். ஏரியை சுத்தம் செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அழைப்பு விடுத்தோம். தினமும் 50, 60 பேர் கூடி ஏரியில் உள்ள பிளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளை அகற்றினோம். ‘நாங்களே சரிசெய்து கொடுக்​கிறோம்’ என்று ஆளும் கட்சியினர் எங்களைத் தடுத்தனர். ‘மூன்று மாதங்களுக்குள் ஏரி தூர்வாரப்படவேண்டும்’ என்று சொன்னோம். ‘செய்துவிடுவோம்’ என்று சொன்னார்கள். மூன்று மாதங்களுக்குப்பின்னும் ஒன்றும் நடக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்