சாதிவெறி பிடிச்ச அந்த காலேஜை இடிக்கணும்!

ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஒரு தாய்

ல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைச் சம்பவம், நாடு முழுவதும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில், இதே மாதிரியான ஒரு மாணவரின் தற்கொலைச் சம்பவம் 2008-ல் நடந்தது. அந்த மாணவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் பழனிச்சாமி, தெய்வானை தம்பதியரின் மகன் செந்தில்குமார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் தொழில் பன்றி மேய்ப்பது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் ஆய்வுப்பட்டம் மேற்கொண்டிருந்தார், செந்தில்குமார். தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாகி, 2008-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதுகுறித்து, 5.3.2008 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘‘பன்றி விற்று... படிக்க வைத்து... பழிசொல் சுமந்து... பாதியில் முடிந்த பரிதாபம்’’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தோம். அதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்த ரவிக்குமார், செந்தில்குமார் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லி பல உதவிகள் செய்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்